• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-24 15:59:30    
திபெத் மற்றும் சீன மொழியிலான இரு மொழி வழி கல்வி

cri
சீனா, 56 தேசிய இனங்களைக் கொண்ட மிகப் பெரிய குடும்பமாகும். 55 சிறுபான்மைத் தேசிய இனங்களில், திபெத் இனம் உள்ளிட்ட 53 தேசிய இனங்கள், சொந்த மொழிகளைக் கொண்டுள்ளன. திபெத் இனம், தனது தனிச்சிறப்பு வாய்ந்த மொழி மற்றும் நீண்டகால வரலாற்றுப் பண்பாட்டுடன், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, நடுவண் அரசு, திபெத் மொழி மற்றும் எழுத்துக்களுக்கான பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் மிகுந்த ஆதரவை அளித்துள்ளது.

திபெத் மொழி, திபெத் இனத்தின் முக்கியப் பரிமாற்ற முறையாகும். துவக்கக் காலத்தில், திபெத் இனத்தின் மதம், பொருளாதாரம், பண்பாடு, அரசியல், சமூக வாழ்க்கை முதலிய பல்வேறு துறைகளில் அது, விரிவான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை எல்லாம், திபெத் இனத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்கு, மாபெரும் பங்காற்றியுள்ளன. சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியான, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்சிக் கமிட்டியின் செயலாளர் Zhang Qingli கூறியதாவது,

தாய்நாட்டுக் குடும்பத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, திபெத்தின் வளர்ச்சி, தாய்நாட்டுடன் இணைந்துள்ளது. பண்பாடு, மொழி மற்றும் எழுத்துக்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட சிறுபான்மைத் தேசிய இனங்கள் பற்றிய பணிகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். திபெத் மொழிக்கான பாதுகாப்புப் பணி, துவக்கப் பள்ளியிலிருந்து தொடங்குகிறது என்றார் அவர்.

சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியான, லாசா நகராட்சித் தலைவர் duojicizhu, இதே கருத்தைக் கொண்டுள்ளார். அவர் கூறியதாவது,

திபெத் இனத்தின் பாரம்பரிய பண்பாடு, திபெத்துக்குரியது மட்டுமல்ல, சீனா மற்றும் உலகிற்கு, ஏன் முழு மனித குலத்திற்குமுரியது. அதனால், அதற்கான பாதுகாப்புப் பணி, மிகவும் முக்கியமாக இருக்கிறது. திபெத்தின் அனைத்து பள்ளிகளிலும், திபெத் மொழி பாடம் அளிக்கப்படுகிறது. தற்போது, திபெத்தில் திபெத் மற்றும் சீன மொழி கூட்டாக பயிற்றுவிக்கப்படுகின்றன என்றார் அவர்.

இது, திபெத்தின் ஷான் நான் பிரதேசத்தின் நே தோங் மாவட்ட இடை நிலை பள்ளியின் மூன்றாம் ஆண்டு வகுப்பிலுள்ள மாணவர்கள், திபெத் மொழியைப் படிக்கும் நிலைமையாகும். இப்பள்ளியின் அனைத்து மாணவர்களும், உள்ளூர் திபெத் இன ஆயர்கள் மற்றும் விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அனைத்து வகுப்புகளிலும், திபெத் மற்றும் சீன மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. திபெத் மொழி பாடத்தில், திபெத்தின் வரலாறு, திபெத் இன இலக்கியம், திபெத் இனக் கவிதை முதலிய அறிவு கற்பிக்கப்படும். திபெத் மற்றும் சீன மொழிகளைப் பயன்படுத்தும் ஆற்றலை வளர்ப்பதற்காக, பல்வகை இரு மொழி வழி கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுப் போட்டிகள், அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

தற்போது, திபெத்தின் rikeze இடை நிலை பள்ளியில் படிக்கும் திபெத் இன சிறுமி cirenlazhen, திபெத் மொழியை மிகவும் விரும்புகிறாள்,

திபெத் மொழி பாடம், நான் மிகவும் விரும்புகிறேன். திபெத் இனத்தின் பாரம்பரிய பண்பாட்டைப் பாதுகாப்பதற்காக, நான் திபெத் மொழியைப் படிக்கிறேன். பொதுவாக நான் திபெத் மொழியில் எமது பெற்றோரிடம் பேசுகிறேன் என்று அவள் கூறினாள்.

அவள் சீன மொழியையும் சரளமாகப் பேச முடியும். துவக்கப் பள்ளியில் சேர்ந்த பின், சீன மொழியைக் கற்கத் துவங்கியதாக அவள் கூறினாள்.

அவர்களது சீன மொழி பாடத்தின் ஆசிரியர்களில், திபெத் இனத்தவர்களும் ஹான் இனத்தவர்களும் இடம் பெறுகின்றனர். திபெத் மொழிப் பாடத்தைத் தவிர, ஆசிரியர்கள், சீன மொழியில், பிற பாடங்களைக் கற்பிக்கின்றனர். சாதாரண நாட்களில், அனைவரும் திபெத் மொழியில், பரிமாறுகின்றனர்.

இரு மொழிகளில் கல்வி நடத்திய பின், பல்வேறு பள்ளிகளின் ஹான் மற்றும் திபெத் இன மாணவர்களுக்கிடையிலான புரிந்துணர்வும் நட்புறவும் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்று உள்ளூர் கல்விப் பணியகத்தின் துணைத் தலைவர் deqingzhuoma அறிமுகப்படுத்தினார்.

மொழி என்பது ஒரு பரிமாற்ற முறையாகும். ஒரு மொழியைக் கூடுதலாகக் கற்றுக் கொண்டு, தேர்ச்சி பெற்றால், மக்களுடன் தொடர்பு கொள்ளும் முறையைக் கூடுதலாகப் பெற முடியும். தனிப்பட்ட வாழ்க்கை, கல்வி மற்றும் பணிக்குத் துணை புரிவது மட்டுமல்ல, மேலும் அதிகமான, புதிய செய்திகளை பெற்று, உலகத்துடனான தொடர்பையும் வலுப்படுத்த முடியும்.

சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியான, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்சிக் கமிட்டியின் செயலாளர் Zhang qingli கூறியதாவது,

இரு மொழிகளைப் பரவல் செய்வது, சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும், எமது நாட்டுக்கும், உலகத்துக்கும், நன்மை பயக்கும். அது, தீங்கு இல்லை. சிறுபான்மைத் தேசிய இன மக்கள் மேலும் கூடுதலான பரிமாற்ற முறைகளைப் பெற்று, தங்களது கண்ணோட்டத்தை விரிவாக்கி, திறமைகளை வளர்த்து, இன்பமான தாயகத்தைக் கட்டியமைத்து, சொந்த வாழ்க்கையை மேம்படுத்த, அது துணை புரியும் என்றார் அவர்.

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் மட்டுமல்ல, முழு நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களிலும், இரு மொழி வழி கல்வி, ஆழமாக வளர முடியும். இதன் விளைவாக, சிறுபான்மைத் தேசிய இன மக்கள், தமது மொழியில் தேர்ச்சி பெறுவதோடு, நாட்டில் பரவலான பயன்பாட்டிலுள்ள மொழியைக் கற்றுக் கொண்டு, தேர்ச்சி பெற முடியும். இதன் விளைவாக, உடன்பிறப்பு இனங்களின் நண்பர்களுடன் மேலும் சிறப்பாகப் பரிமாற்றம் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.