• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-24 16:20:44    
யேன்ச்சி நகரம்

cri

யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்டத்திலிருந்தபடி உங்கள் தமிழ்ப்பிரிவின் சிவகாமி மற்றும் க்ளீட்டஸ்...

எமது பணிப்பயணத்தின் 7வது நாள், ஜூலை 22ம் நாளன்று யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்டத்தின் தலைநகரான யேன்ச்சி நகரின் முக்கிய தலைவர்களை சந்தித்தோம். ஜீலின் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் அமைந்த மிகப்பெரிய தொழில், வர்த்தக மற்றும் சுற்றுலா நகரம் இந்த யேன்ச்சி நகரமாகும். பசுமையான மலைகள், தெளிந்த நீராய் ஓடும் ஆறுகள், பள்ளத்தாக்குகள் என இயற்கையின் வனப்பு சூழ, நவீன தொழில் துறைகள் அமைந்த பொருளாதார வளர்ச்சி மண்டலம் நகரத்தின் நவீன மேம்பாட்டுக்கு துணைபுரிய தேசிய அளவில் நாகரீகமான நகரத்தின் கட்டுமானத்திற்கான பரப்புரைக்கு ஒரு மாதிரி நகரமாக யேன்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்தபோது வியப்பேற்படவில்லை.

ஜூலை 22ம் நாள் முழு சூரிய கிரகணம் நிகழும் நாள் என்பது சீருந்தில் செல்லும் போது மக்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டதும் நினைவுக்கு வந்தது. சீருந்தில் இருந்தபடி மேகத்துடன் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்த சூரியனை பார்க்க முயற்சித்தோம். யேன்ச்சி நகராட்சித் தலைவரைச் சந்திக்க அவரது பணியகத்தை அடைந்தபோது, முந்தைய இரவு பெய்த மழைநீரில் சூரியனின் பிம்பத்தை சிலர் பார்த்துக்கொண்டிருந்தனர். நாங்களும், கறுப்புக் கண்ணாடி மாட்டி மேலே சூரியனின் கிரகணத்தை சில மணித்துளிகள் பார்த்துவிட்டு உள்ளே யேன்ச்சி மாநகராட்சித் தலைவரை சந்திக்கச் சென்றோம். பிலிப்பீன்ஸில் பணிபுரிந்தபோது அங்கே பரோங் என்ற தேசிய மேலாடை அணிவதை கண்டது இங்கே மாநகராட்சித் தலைவரும் இன்ன பிற அதிகாரிகளும் அணிந்திருந்த பாரம்பரிய ஆடை பார்த்தபோது நினைவுக்கு வந்தது. மாநகராட்சி தலைவர் திரு. ஷாவ் ஷெ ஷியுவே எங்களை அன்போடு வரவேற்று யேன்ச்சி நகரின் முக்கியத்துவம், வளர்ச்சி, மக்கள், பண்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இன்முகத்தோடு அவரது விளக்கங்களை கேட்டபின், யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்டத்தின் கட்சிக் கமிட்டி பொதுச் செயலாளர் தெங் காய் அவர்களை சந்திக்கச் சென்றோம். மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பாக அது அமைந்தது. வெளிநாட்டவர்களாகிய எங்கள் மூவரது கேள்விகளுக்கு மிகச் சிறப்பாக புள்ளி விபரங்களோடு அவர் பதிலளித்தார். கேள்விகள் யேன்பியன் கொரியத் தன்னாட்சி மாவட்டத்தின் மக்கள், சமுகம், பொருளாதாரம், பண்பாடு, வளர்ச்சி ஆகியவை தொடர்பானவை என்பதால், மிகத் தெளிவாக, விளக்கமாக அவர் பதிலளித்தார். யேன்பியனின் முக்கிய செய்தி ஊடகங்களும் இந்தச் சிறப்புச் செய்தியாளர் சந்திப்புக்கு வருகை தந்திருந்தது அன்றிரவு தொலைக்காட்சியில் எமது பயணக்குழுவினரின் யேன்பியன் வருகை பற்றிய செய்தி ஒளிபரப்பானபோது புரிந்தது. இச்சந்திப்பு முடிந்தபின், அன்பான விருந்துண்டு யேன்ச்சியில் ஒரு துவக்கப் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டோம். பள்ளி கோடை விடுமுறை என்பதால் மாணவர்களின் நடமாட்டமில்லாதிருந்தது. இருப்பினும் ஆசிரியர் பெருமக்கள் எங்களுக்காக காத்திருந்து, பள்ளி மற்றும் மாணவர்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். பின்னர் யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்ட அதிகாரிகள் எல்லை வரை வந்து வழியனுப்ப, ஜீலின் மாநிலத்தின் மிகச் சிறப்பான ச்சாங்பாய்ஷான் மலைக்குச் செல்ல புறப்பட்டோம். ச்சாங்பாய்ஷான் மிக அழகான ஒரு மலைத்தொடர். அது பற்றிய தகவல்கள் ஜூலை 23ம் நாளன்றை கட்டுரையில் இடம்பெறும்.

ச்சாங்பாய்ஷானிலிருந்து தமிழ்ப்பிரிவுக்காக....

சிவகாமி மற்றும் க்ளீட்டஸ்...