• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-24 10:04:01    
உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டி

cri
ஜுலை முதல் நாள் முதல், 12ம் நாள் வரை, 25வது உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டி செர்பியாவின் தலைநகரான பெல்கிரேடில் நடைபெற்றது. 143 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். பணத்துடன் இதற்குத் தொடர்பு இல்லை என்பது விளையாட்டுப் போட்டியின் முழுக்கமாகும் என்று பெல்கிரேட் பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழு முன்வைத்தது. பல்வேறு நாடுகளின் வீரர்கள் தங்களது மகிழ்வு மூலம் இப்போட்டிக்கு சிறப்பு சின்னத்தை வழங்கினர்.

விளையாட்டுப் போட்டி மூலம், பல்கலைக்கழக மாணவர்களிடையில் பரஸ்பர பரிமாற்றத்தையும், புரிந்துணர்வையும் அதிகரித்து, நட்புறவை வலுப்படுத்தும் வாய்ப்பை வழங்குவது என்பது பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டியின் அடிப்படை நோக்கமாகும். ஆனால், தற்போதைய விளையாட்டுப் போட்டியில் அளவுக்கு மீறிய வணிகமயமாக்கம் உள்ளது. வீரர்களின் சாதனைகள் பல்வேறு துறைகளிலான அவர்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி வருகின்றன. பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டியில் இது கண்டறியப்படவில்லை. உங்களது பல்பலைக்கழக வாழ்க்கையை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் உலகின் மாறுபட்ட இடங்களை சேர்ந்தனர். இந்த

விளையாட்டுப் போட்டியில் நீங்கள் சிறப்பு அனுபவத்தைப் பெறுவர் என்று உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் Killian, துவக்க விழாவில் கூறினார்.
அவரது அறைகூவலில், இந்த விளையாட்டுப் போட்டியின் திடல்கள், அரங்குகள், வீரர் தங்கியிருக்கும் கிராமம் ஆகியவற்றில், வேறுபட்ட நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த வீரர்கள் இணைந்து, அனுபவத்தை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் காணப்பட்டன. இந்த விளையாட்டுப் போட்டியில், சீன வீரர்கள் மாபெரும் சாதனைகளை பெற்றனர். பதக்கங்களைப் பெறுவதோடு, வீரர்கள் போட்டியின்

போக்கை அனுபவித்தனர். ஆங்கில மொழியில், வெளிநாட்டு வீரர்களுடன், அவர்களில் பலர் பரிமாற்றத்தை மேற்கொண்டனர். சீன வீரர்களின் உதவியுடன், சில விளையாட்டு வீரர்கள் சீன மொழியை கற்றுக் கொண்டு பேசினர் என்று 25வது உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டிக்கான சீன பிரதிநிதிக் குழுவின் தலைமைச் செயலாளர் வாங் காங் தெரிவித்தார். பதக்கங்களைப் பெறுவதுடன் ஒப்பிடும் போது, இந்த பரிமாற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.