• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-25 18:23:12    
திபெத் பண்பாட்டுத் துறையில் ஒதுக்கீடு அதிகரிப்பு

cri

சீன நடுவண் அரசின் பெருமளவிலான ஆதரவுடன், பண்பாட்டுத் துறை மற்றும் பண்பாட்டு புத்தாக்கத் துறையில், ஆண்டுதோறும் 2 கோடியே 50 இலட்சம் யுவானை ஒதுக்கீடு செய்ய திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு தீர்மானித்தது. இதன் விளைவாக, திபெத் பண்பாட்டுத் துறையின் வளர்ச்சி மேலும் விரைவுபடுத்தப்படும்.

நீண்டகால வரலாறு மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த திபெத்தின பண்பாட்டைப் பாதுகாப்பதில், சீன அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. 2001ம் ஆண்டு, திபெத் பணி பற்றிய 4வது கலந்துரையாடல் கூட்டத்தில், சீன நடுவண் அரசு 33 கோடி யுவான் மதிப்புள்ள ஒதுக்கீட்டு திட்டத்தை நிர்ணயித்துள்ளது. இத்தொகை, போத்தலா மாளிகை, நார்பு லிங்கா, சாக்கிய துறவியர் மடம் ஆகிய மூன்று முக்கிய தொல்பொருட்களுக்கான பாதுகாத்துச் செப்பனிடும் திட்டப்பணியில் பயன்படுத்தப்பட்டது. 2006 முதல், 2010ம் ஆண்டு வரை, திபெத்தில் 22 தொல்பொருள் பாதுகாப்புத் திட்டப்பணிகளில், அரசு 57 கோடி யுவானை ஒதுக்கீடு செய்தது.