2006 முதல் 2010ம் ஆண்டு வரை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் முக்கியத் தொல்பொருள் பாதுகாப்புத் திட்டப்பணியாக, லாசா நகரிலுள்ள ஜோகாங் கோயில் மற்றும் Tamoche துறவியர் மடத்தைச் செப்பனிடும் திட்டப்பணி, 26ம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
ஜோகாங் கோயில் மற்றும் Tamoche துறவியர் மடம், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உடையது. அவை, திபெத்தின கட்டிடக் கலை, தேசியப் பண்பாட்டுடன் ஒருங்கிணைந்த தலைசிறந்த பிரதிநிதிகளாகும். நீண்டகால வரலாறு, இயற்கை பாதிப்பு ஆகிய காரணங்களால், அவை, வெவ்வேறான அளவில் சீர்குலைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் முக்கிய கட்டிடங்களுக்கு பாதுகாப்பு ரீதியான செப்பனிடுதல் நடத்தும் வகையில், சீன அரசு, இத்திட்டப்பணியில் 3 கோடியே 40 இலட்சம் யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது.
|