• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-28 16:30:11    
பெய்ஜிங்கின் கட்டிடவியல்

cri
இயற்கையின் படைப்புகளில் எண்ணிலடங்கா, சொல்லிலடங்கா அழகு கொட்டிக்கிடக்கிறது. கவிஞர்களும், நம்மை போல எளிய மக்களும் சற்றே அவதானத்தோடு புலன்கள் விழிக்க பார்க்கத்தெரிந்தால், இயற்கையின் அழகியல் கூறுகளையும், அழகின் உச்சபட்ச வெளிப்பாடுகளை உணர்ந்து கொள்ளமுடியும். இயற்கையின் அழகின் பாதிப்பில், அதன் மீதான் ஈடுபாட்டின் வெளிப்பாடே, மனிதனின் படைப்பாற்றலின் சாரம் எனலாம். என்ன மனிதனின் படைப்புகள் வேறு ஒரு பரிமாணமாக அமைகின்றன.

மலைகளும், பள்ளத்தாக்குகளும், பீடபூமிகளும், குகைகளும், நீர்நிலைகளும் இயற்கையின் கட்டிடவியல் என்றால் வானளாவியதாய் இன்றைக்கு நிற்கும் கட்டிடங்கள் மனிதனின் அறிவுசார் வளர்ச்சியின் பலனை எடுத்துக்காட்டும் பிரம்மாண்ட சின்னங்களாக நிற்கின்றன.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வந்தவர்கள் பலரும் முக்கியமாக குறிப்பிடும் ஒரு அம்சம் இருக்கிறது. பெய்ஜிங் மாநகரின் பழமையும், புதுமையும் கலந்த, பண்டைக்காலமும், நவீனகாலமும் இணைந்த அழகான தோற்றம்தான் அது.

ஒரு பக்கம் வானளாவிய கட்டிடங்கள், புதிய பாணியில் மிக நளினமாக நிற்க, மறுபக்கம் அரண்களும், அரண்மனைகளுமாக அரச தோரணையில் பண்டைய கட்டிடங்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. தியெனான்மென் சதுக்கம் நவசீனாவின் அடையாளச் சின்னமாக கம்பீரமாக விளங்குவது போல், பண்டைய சீனாவின் நினைவூட்டலாய் அமைந்த சொர்க்கக் கோயில், கோடைக்கால மாளிகை, மணி மற்றும் முரசு கோபுரங்கள், தடை செய்யப்பட்ட அல்லது விலக்கப்பட்ட நகரம் ஆகியவை பெய்ஜிங்கின் கட்டிடங்களுக்கு தனி அழகு சேர்க்கின்றன. இந்த நான்கு கட்டிடங்கள் அல்லது காட்சியிடங்கள் பெய்ஜிங்கில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியவையாகும். பண்டைக்காலம் முதலே பெய்ஜிங் மாநகரம், நகரைச் சுற்றிய அதன் அரண், சுவற்றுக்கென புகழ்பெற்ற நகரமாகும். வடக்கத்திய படையெடுப்பாளர்களிடமிருந்து பேரரசரையும், மக்களையும் காப்பாற்ற பெய்ஜிங் மாநகரைச் சுற்றி அரண் எழுப்பப்பட்டது. கோட்டைக்குள்ளே இருந்த நகரம் என்பதாக, பெய்ஜினை சுற்றிய அரண் , மிகவும் பாதுகாப்பாக அமைந்திருந்தது. இந்த அரணை கடந்து மக்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் உள்ளே வரவும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நுழைவாயில்கள் வைக்கப்பட்டிருந்தன. அன்றைய காலக்கட்டத்தில் இந்த நுழைவாயில்கள் ராணுவ மற்றும் நிலவுடைமை ஆற்றலை வெளிப்படுத்திய அடையாளமாக இருந்தன. ஆனால் பெய்ஜிங்கை சுற்றி அமைந்த இந்த நுழைவாயில்கள் 1950 களில் தகர்க்கப்பட்டன. இன்றைக்கு மூன்று நுழைவாயில்கள்கள் மட்டுமே பெய்ஜிங்கில் காணப்படுகின்றன. அவை ச்சியான்மென்(Qianmen), தெஷெங்மென் (Deshengmen) கண்காணிப்பு கோபுரம் மற்றும் யோங்திங்மென் (Yongdingmen) வாயில்கள். இந்த நுழைவாயில்களை பற்றி அறிவது அந்நாளைய அரச நகரத்தை பற்றியும், சீனப் பண்பாட்டிலான அதன் உள்ளடக்கம் பற்றியும் அறிய உதவும்.

முதலில் பெய்ஜிங் மாநகரை சுற்றி அக்காலத்தில் அமைந்திருந்த நுழைவாயில்களை பட்டியலிடலாம். ஏற்கனவே சற்று முன் குறிப்பிட்ட ச்சியான்மென், தெஷெங்மென், யோங்திங்மென் தவிர இன்னும் 7 வாயில்கள் இருந்தன. ச்சொங்வென்மென் (Chongwengmen), ஷுவான்வூமென் (Xuanwumen), ஆண்டிங்மென் (Andingmen), துங்ஷுமென் (Dongzhimen), ஷிஷுமென் (Xizhimen), ஜியாங்குவோமென் (Jiangguomen), ஃபூஷிங்மென் (Fuxingmen), ஹெபிங்மென் (Hepingmen) ஆகியவை இந்த வாயில்களாகும்.

நகரைச் சுற்றிய அரணை விட்டு வெளியேறவும், உள்ளே நுழையவும்தான் இந்த வாயில்கள் பயன்பட்டன, அது உண்மை. வாயில்கள் வருவதற்கும் போவதற்கும் தானே கட்டியமைக்கப்படுகின்றன. ஆனால் அதில் கூட அக்காலத்தில் பேரரசர்கள் வெவ்வேறு அம்சங்களை கடைபிடித்தனர். எடுத்துக்காட்டாக மிங் வம்சக்காலந்தொட்டே போருக்காக செல்லும்போது, மற்ற நுழைவாயில்களை விட தெஷெங்மென் வாயில் வழியாகத்தான் பேரரசர் படைகளோடு வெளியேறுவாராம். காரணம் தெஷெங் என்ற உச்சரிப்பு சீன மொழியில் வெற்றிபெறுதல் என்றும் பொருள்படுமாம். போர் முடித்து வீடு திரும்புகையில் ராணுவத்தினர் ஆண்டிங்மென் வழியாகத்தான் வருவார்கள். சீன மொழியில் ஆண்டிங்மென் என்றால் அமைதி வாயில் என்று பொருளாம். ச்சியான்மென் அல்லது ஷெங்யாங்மென் என்ற வாயில் பேரரசுருக்காக மட்டுமே சிறப்பாக வைக்கப்பட்ட வாயில் எனலாம். ஷுவான்வூமென் வாயில் சிறை ஊர்திகள் வெளியேறும் வாயிலாக இருந்தது. நிலக்கரியை சுமந்த வண்டிகள் ஃபூச்செங்மென் வழியாகவும், நீர் சுமந்த வண்டிகள் ஷிஷுமென் வழியாகவும் நுழைந்தன.