ஹுவாங்ஷான் மலையின் பெய்காய் காட்சிப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் லியன்யூன்கூ காட்சிப் பிரதேசமும், தெற்குப் பகுதியில் யூப்பிங் காட்சிப் பிரதேசமும், வடக்குப் பகுதியில் சூங்கூ காட்சிப் பிரதேசமும் உள்ளன. அது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1600 மீட்டர் உயரமான பரந்த மலைப் பிரதேசமாகும். அதன் பரப்பளவு 1316 ஹெக்டராகும்.

இப்பிரதேசத்தில், மலைமுகட்டுகள், தேவதாரு மரங்கள், மூட்டங்கள் முதலிய தனிச்சிறப்பு வாய்ந்த காட்சிகள் இடம்பெறுகின்றன. சிங்க மலைமுகட்டு, ச்சிங்லியாங் மேடை, பெஃய்லாய் கற்பாறை முதலிய காட்சிகள், மக்களின் கண்களை ஈர்த்து வருகின்றன.
 
இப்பிரதேசத்திலுள்ள ஷீ மேன் மலைமுகட்டு, கோங்யாங் மலை ஆகியவை, கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டருக்கு மேலான உயரம் உடையவை. அவை பாதுகாப்புத் தட்டியைப் போன்றவை.

பெய்காய் காட்சிப் பிரதேசம், ஹுவாங்ஷான் மலையின் முக்கிய காட்சிப் பிரதேசமும், உபசரிப்புப் பிரதேசமும் ஆகும். அது, ஹுவாங்ஷான் மலையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறு காட்சிகப் பிரதேசங்களுக்கு இதன் வழியாகச் செல்லலாம். இதனால், அது, அதிகமான மக்கள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதேசமாக மாறியுள்ளது.
|