• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-29 09:46:21    
குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி

cri
16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழு தொடர்புடைய பல்வேறு ஆயத்த பணிகளை பன்முகங்களிலும் விரைவபடுத்து வருகின்றது, திடல்கள் மற்றும் அரங்குகளின் கட்டுமானமும் பிரச்சார பணிகளும் சுமுகமாக நடைபெறுகின்றன என்று சீனாவின் தென் பகுதியிலுள்ள குவாங் சோ மாநகராட்சி துணை தலைவரும், குவாங் சோ ஆசிய விளையாட்டு போட்டி அமைப்புக் குழுவின் துணை தலைமைச் செயலாளருமான Xu Ruisheng, 24ம் நாள் பாரிஸ் நகரில் தெரிவித்தார்.

Xu Ruisheng தலைமையிலான குவாங் ஆசிய விளையாட்டுப் போட்டி அமைப்புக் குழுவின் பிரதிநிதிக் குழு பாரிஸிலுள்ள ஐ.நா.வின் யுனேஷ்கோ தலைமையகத்தில், உறுப்பு நாடுகளிடம், 16வது குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றி பிரச்சாரம் செய்தது. அத்துடன், உள்ளூர் செய்தி ஊடகங்களிடம், குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகள் பற்றியும் Xu Ruisheng விவரித்தார் என்று அறியப்படுகின்றது.

நகரவாசிகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருத்துகளை உயர்த்தும் வகையில், சீனாவின் தென் பகுதியிலுள்ள குவாங் சோ நகர், ஈராயிரத்துக்கு அதிகமானோர் கலந்துகொண்ட ச்சூ சியாங் ஆற்றை தாண்டும் நீச்சல் நடவடிக்கையை 23ம் நாள் ஏற்பாடு செய்தது.
சீனாவின் முக்கிய ஆறுகளில் ச்சூ ச்சியாங் ஒன்றாகும். குவாங் சோ மற்றும் அதற்கு அருகிலான பிரதேசங்களைச் சேர்ந்த 2000க்கு அதிகமான நீச்சலை நேசிப்பவர்கள் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டனர். ச்சூ ச்சியாங் ஆற்றின் நீர் தரம் தொடர்ந்து உயர்த்துவதற்கு அவர்கள் எல்லையின்றி மகிழ்ச்சியடைந்தனர். நீர் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டை அரசு தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

2006ம் ஆண்டு முதல், ச்சூ ச்சியாங் ஆற்றை தாண்டும் நீச்சல் நடவடிக்கை மீட்கப்பட்ட பின், குவாங் சோ நகர அரசு நீர் மாசுபாடு கட்டுப்பாட்டு பணியை பெரிதாக்கியது. கடந்த 4 ஆண்டுகளில், அழுக்கு நீரைக் கையாளும் 10 ஆலைகள் கட்டியமைக்கப்பட்டு, புத்தாக்கப்பட்டுள்ளன என்று அறியப்படுகின்றது.