• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-29 09:52:56    
பேரழகி சி ஷு

cri
வூ என்ற நாட்டை வெல்ல யுவே நாட்டு மன்னனுக்கு உதவிய பேரழகி சி ஷுவை பற்றிய கதை. யுவே நாட்டு மன்னனை போரில் வீழ்த்தி, சிறைவைத்து இழிவுபடுத்திய வூ நாட்டு அரசனை, பழிவாங்க யுவே மன்னன் தீட்டிய ஒரு சீரிய திட்டத்தின் ஒரு பகுதியாக வூ நாட்டுக்கு அனுப்பப்பட்டவள் அழகி சி ஷு. வூ நாட்டு அமைசசன் ஃபான் லி, சி ஷுவையும், அவளது தோழியான ஷெங் தான் உள்ளிட்ட சில அழகிகளையும், சில இசைக்கலைஞர்களையும் அழைத்துக்கொண்டு, யுவே நாட்டு மன்னனின் அன்பளிப்பாக அவர்களை யுவே நாட்டு அரசன் ஃபூ ச்சாயிடம் ஒப்படைத்தான். இந்த அன்பளிப்பை ஃபான் லி கொண்டு வரும் செய்தி வூ நாட்டு அமைச்சரான வூ ஸிசியுவுக்கு தெரிந்து அரசனிடம் சென்று, அழகிகளால் ஆட்சியிழந்த பல அரசர்களின் கதைகளை கூறி, மறுக்குமாறு கூறினார். ஆனால் வூ நாட்டு அரசன் ஃபூ ச்சாயோ அமைச்சர் சொன்னதை காதில் வாங்காமல் தட்டிக்கழித்தான். அரசன் தன் அறிவுரையை கேட்காமல் இருந்ததை நினைத்து பெருமூச்சோடு அங்கிருந்து சென்றார் அமைச்சர் வூ ஸிசியு.

அதற்கு பின் வூ நாட்டு அரசன் ஃபூ ச்சாய் பெரும்பகுதி நேரத்தை யுவே நாட்டு அழகிகளின் பாடல், ஆடலும், மதுக்கோப்பையுமாக செலவழித்தான். அதிலும், அறிவாலும், அழகாலும் மயக்கிய சி ஷு அரசன் ஃபூ ச்சாயின் மனதில் இடம் பிடித்தாள். அவளது கட்டழகு மேனிக்கும், கந்தர்வக் கண்களுக்கும் கட்டுப்பட்டவனாக அரசன் ஃபூ ச்சாய் தன் அரசக் கடமைகளையும் புறக்கணித்து, மகிழ்ச்சியாக ஆடல் பாடல்களை ரசிப்பதே வேலையாய் கொண்டான். சி ஷு அரசன் ஃபூ ச்சாயை அவனை பதவிக்கு அமர்த்தி அழகுபார்த்த, அவனது தந்தைக்குமே பேருதவியாக இருந்த அமைச்சர் வூ ஸிசியுவை சந்திக்காது தடுக்க முயன்றாள். ஆனால் அதை மட்டும் அவளால் செய்ய முடியவில்லை. அரசன் ஃபூ ச்சாய் அமைச்சர் வூ ஸிசியுவை தன் மிக நெருக்கமான வட்டத்தில் வைத்திருந்தான். ஆக, அமைச்சர் வூ ஸிசியுவை அரசனின் காதுகளில் அறிவுரையும், தெளிவுரையும் கூறாமல் தடுத்துவிட்டால் அரசனை முற்றாக வசியமாக்கிவிடலாம் என்றுணர்ந்த சி ஷு, அதை சாதிக்க வழி தேடினாள். ஒரு முறை, அரசன் ஃபூ சாயிடம் எங்கள் அனைவருக்கும் அமைச்சர் வூ ஸிசியுவை கண்டால் பயம் அரசே என்றாள், அரசன் ஏன் என்று கேட்க, அமைச்சர் வூ ஸிசியுக்கு எங்கள் யுவே நாட்டு மன்னன் மீது கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. எனவே நீங்கள் அமைச்சரை கேட்டு எங்களை யுவே நாட்டுக்கே திரும்ப அனுப்பிவிட்டால், நான் எப்படி உங்களை பிரிந்திருக்க முடியும். பிரிவுத்துயரை எப்படி சமாளிப்பேன். உங்களோடு ஒப்பிடுகையில் யுவே மன்னன் எம்மாத்திரம். யுவே நாட்டு அரண்மனை இங்குள்ள உங்கள் அரண்மனையின் மேன்மைக்கும், அழகுக்கும் இணையாகுமா என்ன? ஆக உங்களை விட்டு பிரியும் சூழல் வந்தால், பிரிந்து செல்வதை விட உங்கள் கண்முன்னே என் உயிரை மாய்த்துக்கொள்வேன் இல்லையேல் ஆற்றில் குதித்து சாவேனே ஒழிய யுவே நாட்டுக்கு திரும்ப மாட்டேன். நான் இறந்த பிறகு என் ஆவி உங்களோடு வந்து துணையாக நிற்கும் என்று கண்ணீர் மல்கக் கூறினாள்.


இதையெல்லாம் கேட்ட அரசன் ஃபூ ச்சாய், கவலைகொள்ளாதெ என் ஆரூயிரே. நான் உயிருடன் இருக்கும் வரை, உன்னை யார் இங்கிருந்து அனுப்பிவிட முடியும்? எதற்காக அந்த வூ ஸிசியுவை பற்றி நான் கவலைப்படவேண்டும்? அந்த கிழட்டு அமைச்சனின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துத்தான் வருகிறது. என்னமோ வூ நாட்டு தனக்கே சொந்தம் போல், எல்லாவற்றிலும் தலையிடுகிறான். யார் என்று தன்னை நினைத்துக்கொண்டான் அந்த கிழட்டு அமைச்சன். சொந்த நாட்டை விட்டு தஞ்சமாக இங்கு வந்தபோது என் தந்தைதான் அடைக்கலம் கொடுத்து ஆதரித்தார். ஆனால் இப்போது என்னமோ தானே இந்த நாட்டின் மூத்த குடிமகன் போல் நடந்துகொள்கிறான். என்றைக்காவது ஒரு நாள் யார் தலைவன் என்பதை அந்த கிழவனுக்கு நான் கற்றுத் தருவேன்" என்றான் அரசன் ஃபூ ச்சாய்.