• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-04 10:22:34    
ஹுவாங்ஷான் மலையில் சுற்றுலா வழிகாட்டி (ஈ)

cri

பெய்யூன் காட்சிப் பிரதேசம்

ஹுவாங்ஷான் மலையின் பெய்யூன் காட்சிப் பிரதேசம், ஹுவாங்ஷான் மலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு 1655 ஹெக்டராகும். தியாவ்ச்சியாவ் பெண் துறவியர் மடம், இக்காட்சிப் பிரதேசத்தின் மையமாக அமைந்துள்ளது. அது, கடல் மட்டத்திலிருந்து 610 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. தியாவ்ச்சியாவ் பெண் துறவியர் மடம், பெய்யூன் பெண் துறவியர் மடம் எனவும் அழைக்கப்படுகிறது. தேவதாரு மரங்கள், பாறைகள், ஊற்றுகள் ஆகியவை, இப்பிரதேசத்தின் எழில் மிக்க காட்சிகளாக உருவாகுகின்றன.

சோங்கூ காட்சிப் பிரதேசம்

ஹுவாங்ஷான் மலை பற்றி, முன் பக்கம் அபாயமாகவும், பின் பக்கம் அழகாகவும் இருக்கிறது என்ற கூற்று உண்டு. பின் மலை என்பது, ஹுவாங்ஷான் மலையின் வடக்கு வாயிலிலுள்ள சோங்கூ காட்சிப் பிரதேசமாகும்.

இப்பிரதேசம், ஹுவாங்ஷான் மலையின் வடக்கில் இருக்கிறது. ஷிசி மலைமுகடு, லுவொதுவொ மலைமுகடு, ஷூசியாங் மலைமுகடு, பாவ்தா மலைமுகடு ஆகியவற்றுக்கு இடையிலான பள்ளத்தாக்காகும். பயணிகள் ஹுவாங்ஷான் மலை சென்றடைந்த போது, வடக்கு வாயிலான பூஃழோங்லிங் மலையிலிருந்து நுழைவது, பார்வையிட உகந்த தேர்வாகும்.

பூஃழோங்லிங் மலை, கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இங்கு, உயரன மலைகளும், நெரிசலான மரங்களும் காணப்படலாம். இயற்கைக் காட்சிகளைத் தவிர, பூஃழோங் வீடு, சோங்கூசென்லின் முதலிய பழங்கால கட்டிடங்கள் இங்கு காணப்படலாம். இவை, அமைதியான இப்பிரதேசத்தை வினோதமான நன்றாக மாற்றுகின்றன.