அண்மையில் பெய்ஜிங்கில் சிந்தனை கிடங்கு அமைப்பின் மாநாடு நடைபெற்ற போது இந்திய செய்தி ஊடகங்களின் பொறுப்பாளர்கள் இடம் பெற்ற பிரதிநிதிக் குழு கலந்து கொண்டது. பின்னர் அக்குழு சீன வானொலி நிலையத்தை பார்வையிட்டது. "இந்தியாடுடே" எனும் வார இதழின் நிர்வாக தலைமை பதிப்பாசிரியர் திரு ராஜ் சங்கப்பா, புதுதில்லியில் தலைமையகத்தை கொண்டுள்ள சக்கால் எனும் மராத்திய மொழி செய்தியேட்டின் செய்தியாளர் திரு விஜியா புருசொட்டன் நைக், இந்தியாவில் மிக பெரிய செய்தி நிறுவனமான பிரஸ்ட்செஸ்ட் அப் இந்தியாவின் மூத்த அரசியல் பதிப்பாசிரியர் திரு எஸ் காத்தாட்டி, இந்திய சிந்தனை கிடங்கு அமைப்பின் கொள்கை தேர்வு மையத்தை சேர்ந்த சீன பிரச்சினைகளின் ஆய்வாளர் திரு ஜொராவார் தோலட் சிங் ஆகியோர் இந்த பிரதிநிதிக் குழுவின் உறுப்பினராவர். அவர்கள் சீன வானொலியை பார்வையிட்டனர். சீன வானொலி துணை இயக்குனர் லீச்சுன்சான் அவர்களை சந்தித்து உரையாடினார். இன்றைய கேள்வியும் பதிலும் நிகழச்சியில் இந்த சந்திப்பின் முதல் பகுதியை வழங்குகின்றோம். தொகுத்து வழங்குபவர் தி. கலையரசி.
சீன-இந்திய உறவு பற்றி குறிப்பிட்ட போது சீன வானொலி துணை இயக்குநர் சீச்சுன்சான் கூறியதாவது.
சீனாவும் இந்தியாவும் அண்டை நாடுகளாகும். பண்டைகாலம் தொட்டு பொருளாதாரம் வர்த்தகம், கடல் வழி சுற்றுப் பயணம், மதபரப்புரை முதலிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையில் தொடர்புகள் உண்டு. சீனாவின் தயாரிப்பு தொழில் வளற்ச்சியடைந்துள்ளது. இந்தியாவின் சேவை தொழில் துறையும் தகவல் தொழில் நுட்ப துறையும் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளன. நாம் பொருளாதார அதிகரிப்பில் ஒன்றுக்கு ஒன்று உதவி அளிக்கலாம் என்று அவர் கூறினார்.
இரு நாட்டுச் செய்தி ஊடகங்களுக்கிடையில் பரந்தளவிலான ஒத்துழைப்பு பற்றி அவர் கூறியதாவது.
2004ம் ஆண்டு சீன ஒலி ஒளி மற்றும் திரைப்பட பிரதிநிதி குழுவின் தலைவர் என்ற முறையில் நான் இந்தியாவில் பணிப் பயணம் மேற்கொண்டேன். அப்போது புதுதில்லி, மும்பை முதலிய இடங்களை பார்வையிட்டோம். பண்பாடு தொலைக்காட்சித் துறை முதலிய துறைகளில் நாம் ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ள முடியும் அம்சங்கள் அதிகம். மும்பையில் பணி பயணம் மேற்கொண்ட போது நாங்கள் குறிப்பாக பரோட்வை பார்வையிட்டோம். அளவு பெரியதல்ல. ஆனால் அது இந்திய மக்களுக்கு மலிவான பல்வகை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. ஆடல் பாடல்கள் கலந்த இந்திய திரைப்படங்கள் மக்களின் பொழுதுப்போக்கை செழுமைபடுத்துவதற்கு உதவுகின்றன. நாம் திரைப்பட தயாரிப்புத் துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்ளலாம். மக்களுக்கு மேலும் கூடுதலாக நன்மை பயக்கலாம் என்று அவர் கூறினார்.
தற்போது உலகில் பயங்கரவாத எதிர்ப்பு நிலைமை தொடர்வதால் விழிப்புடன் இருக்க வேண்டிய இந்த தருணத்தில் சீனாவும் இந்தியாவும் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இது பற்றி துணை இயக்குநர் லீச்சுன்சான் கூறியதாவது.
அண்மையில் சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் நிகழ்ந்த வன்முறை குற்றச்செயல்கள், கடந்த ஆண்டின் நவெம்பர் திங்களில் மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றால் அப்பாவி மக்கள் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் நிகழந்த வன்முறை குற்றச்செயல்கள் சீனாதான் அறிவிக்க வேண்டும். கிழக்கு துஜெஸ்தான் தீவிரவாதிகளின் பின்னணியில் இந்த வன்முறை சம்பவம் உருவாக்கப்பட்டது. இந்த வன்முறை குற்றச்செயல்கள் செய்தவர் மிகவும் தெளிவான கொடுமையான தீவிரவாதிகளாவர் என்பதை உண்மைகள் கோடிட்டு காட்டியுள்ளன. உருமுச்சி ஜுலை 5 வன்முறை குற்றச்செயல்களுக்கும் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குமிடையில் ஒத்த தன்மைகள் காணப்படுகின்றன. அதாவது கொடிய வன்முறைச் செயல்கள் இவ்விரண்டிலும் காணப்படலாம். ஆகவே நாம் ஒன்றிணைந்து பயங்கரவாத எதிர்ப்பை கூட்டாக செயல்படுத்த வேண்டும். வன்முறை செயல்களை வெளிப்படுத்தி உலக மக்களுக்கு நடைமுறை உண்மைகளை அறிவிக்க நமது செய்தி ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று லீச்சுன்சான் விவரித்தார்.
சீனாவும் இந்தியாவும் உலகில் மிக பெரிய நாடுகளாகும். இது பற்றி அவர் கூறியதாவது.
அரசியல் துறையில் நமக்கிடையில் பிரச்சினை இல்லை. வரலாற்றில் பெரிய பிரச்சினைகள் நிலவவில்லை. சீனா இந்தியாவை ஆக்கிரமிக்க வில்லை. இந்தியாவும் சீனாவை ஆக்கிரமிக்க வில்லை. அண்டை நாடுகள் என்ற நட்பார்ந்த உறவு இரு நாடுகளுக்கிடையில் உண்டு. மேலை நாட்டுச் செய்தி ஊடகங்கள் நமக்கிடையில் தவறான புரிதல்களை உண்டாக்கி வருகின்றன. சீனா வளர்ச்சியடைந்த பின் இந்தியாவை அச்சுறுத்தும். இந்தியா வளர்ச்சியடைந்த பின் சீனாவை அச்சுறுத்தும் என்று கருத்துக்களை பரப்பி சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் போர் ஏற்படுவதையே அவை விரும்புகின்றன. இதன் மூலம் அவை இலாபம் பெற விரும்புகின்றன. இந்த பின்னணியில் இரு நாடுகளும் சம நிலையில் வளர வேண்டும். இந்த ஆண்டு சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 8 விழுக்காட்டை எட்டலாம். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6 விழுக்காட்டை எட்டலாம் என்று அறிகிறேன். ஆகவே மேலை நாடுகள் நம்மை போட்டியாக கருதுகின்றன. நாம் இருதரப்பும் ஒன்றிணைந்து நமது பொருளாதாரத்தை நன்றாக வளர்க்க பாடுபட வேண்டும். மக்கள் இன்பமாக வாழத் துணை புரிய வேண்டும். நான் நீண்டகாலமாக மேலை நாட்டில் பணி புரிந்திருக்கிறேன். ஆகவே நான் இப்போது சொன்னவற்றை நீங்கள் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்று துணை இயக்குநர் லீச்சுன்சான் கூறினார்.
சந்திப்பின் போது சீன வானொலியின் பணிகள் பற்றி விருந்தினர்களுக்கு துணை இயக்குனர் லீச்சுசான் விபரமாக விவரித்தார். அவர் கூறியதாவது
சீன வானொலி நிலையத்தில் நான்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் பகுதியில் சிற்றலையில் சீன வானொலி நிகழ்ச்சிகள் உலகத்திற்கு ஒலிபரப்பப்படுகின்றன. 22 பண்பலை வானொலி நிலையங்கள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. பல்வேறு நாடுகளில் அமைந்த 33 செய்தியாளர் நிலையங்கள் எங்களுக்கு செய்திகள் வழங்குகின்றன. உள்நாட்டில் 31 செய்தியாளர் நிலையங்கள் செயல்படுகின்றன. எண்ணியவல் தொலைக்காட்சி மற்றும் செல்லிடபேசி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்படுகின்றன. இந்தி, தமிழ் உள்ளிட்ட 59 மொழிகளில் இணையதளங்கள் உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் செய்திகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் தாமதமின்றி அறிவிக்கப்படுகின்றன. ஆகவே தேவையான செய்திகள் மற்றும் கருப்பொருட்களை எங்கள் இணையதளங்களின் மூலம் தேடி பெறலாம். தவிரவும் உலகின் செய்திகள் அறிவிப்பு எனும் செய்தியேடு வெளியீட்டகமும் சீன வானொலி நிலையத்தில் இடம் பெறுகின்றது என்று துணை இயக்குநர் சீச்சுன்சான் சந்திப்பின் போது அறிமுகப்படுத்தினார்.
|