• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-30 16:13:54    
விரும்பிய குழந்தை

cri
விரும்பிய குழந்தை

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் தனது அலுவலகங்களை கொண்டுள்ள மருத்துவ சிகிச்சை மையம் ஒன்று, தாங்கள் விரும்பிய குழந்தைகளை பெற்றெடுக்க நினைக்கும் தம்பதியருக்கு உதவி அளிப்பதாக விளம்பரம் செய்துள்ளது. அதாவது தங்களுக்கு பிறக்கபோகும் குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக, விரும்பிய வண்ணத்தில் கண்கள் மற்றும் தலைமுடி கொண்ட குழந்தையாக இருக்க உதவி அளிக்குமாம். மருத்துவ துறையில் Genetic Counselling எனப்படும் மரபியல் ஆற்றுப்படுத்துதல், பெற்றோரிடம் உள்ள மரபியல் சார்ந்த கோளாறுகள் குழந்தைகளுக்கு சென்றடைவதை தடுக்க உதவுகிறது. ஆனால் இப்போது பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ற பண்புகள் கொண்ட குழந்தைகளை பெற்றெடுக்கவும் இதனை பயன்படுத்திகொள்ள முடியும் என்று கருவுறுதிறனை வளர்க்கும் நிறுவனத்தின் மருத்துவர் Jeffrey Steinberg தெரிவித்துள்ளார். தம்பதியர் தங்கள் குழந்தைக்கு நீல வண்ண கண்கள் வேண்டும் என்று கேட்டால் பிறக்கின்ற குழந்தை நீல வண்ண கண்களோடு பிறப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவிக்கிறார். ஆனால், இந்த கருத்து பொது மக்கள் பலரின் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. குழந்தைகளின் வண்ணம், வடிவமைப்பு பற்றி திட்டமிடு பெற்றோர், என்ன தான் சாதிக்க போகிறார்கள்? கருவுறுவதில் சிக்கல்கள் இருப்பவர்களுக்கு அதிலிருந்து மீளுவது தொடர்பான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் அளிப்பது தான் மருத்துவர்களின் கடமையாக இருக்க வேண்டுமென்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

முதல் குடிமகனுக்கு சீன ஆடை

ஐரோப்பா கண்டத்திலுள்ள பெல்ஜியத்தின் தலைநகரான Brussels சிலுள்ள, வெண்கல சிலை ஒன்றுக்கு பாரம்பரிய சீன தோலாடை அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை Brussels நகரத்தின் முதல் குடிமகன் என்ற சிறப்புபெற்ற ஜூலியன் என்ற சிறுவனின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. மணிக்கன் பிஸ் ஃபவுண்டன் எனப்படும் இந்த சிலை வைக்கப்ட்டுள்ள சந்திப்பு Brussels நகரத்தின் ஓர் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த இடமாக தற்போது திகழ்கிறது. இந்த சிலைக்கு பாரம்பரிய சீன சிவப்பு வண்ண தோலாடை அணிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தோல் தொழிலின் தலைநகரம் என்று புகழப்படும் Zhejiang மாநிலத்தின் Haining நகரட்சி இதனை வழங்கியுள்ளது. Brussels நகரத்தின் நாயகனான இந்த சிறுவனின் சிலைக்கு ஆடை அணிவிப்பது 300 ஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது. தற்போது Haining நகரம் வழங்கியுள்ள தோலாடை 819 வது ஆடை என தெரிகிறது.

சீன பாரம்பரிய பாணியிலான இந்த தோலாடை சர்வதேச ஆடை அலங்காரங்களோடு தைக்கப்பட்டுள்ளது. சீனாவின் தோல் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள புத்தாக்க முயற்சிகளையும், சீனா பெல்ஜியம் நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் ஆழத்தையும் வெளிக்காட்டுவதாகவும் இந்நிகழ்ச்சி அமைகிறது. சீனா, Brussels நகரத்தின் முதல் குடிமகன் என்ற சிறப்புபெற்ற ஜூலியன் சிலைக்கு ஆடை வழங்குவது இது மூன்றாவது முறை. இதற்கு முன்னால் 1979 ஆம் ஆண்டு Brussels நகரம் ஆயிரம் ஆண்டு நிறைவை கொண்டாடியபோது மாண்டிரின் ஆடையையும், 2006 ஆம் ஆண்டு சீன விண்வெளி வீரர் Fei Junlong மேற்கொண்ட விண்வெளி பயணத்தை வரவேற்கும் விதமாக, சீனாவின் விண்வெளி வீரருக்கான ஆடையையும் பெய்ஜிங் நகராட்சி இந்த சிலைக்கு அளித்துள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு Brussels நகரை தாக்க வந்த எதிரிகள் வெடிமருந்துகளை வெடிக்க செய்து நகரை முழுவதும் அழிக்கும் விதமாக வெடிமருந்துகளோடு இணைக்கப்பட்ட திரியில் தீ பற்ற வைத்துவிட்டு ஓடி மறைந்தனர். இதை கண்ட சிறுவன் ஜூலியன் அந்த தீ வெடிமருந்துகளில் பரவி வெடிக்கும் முன்பாக எரிந்து வந்த திரியின் மேல் சிறுநீர் கழித்து தீயை அணைத்தான். தனது உயிரையே பணயம் வைத்து இந்த வீரச்செயலை மேற்கொண்ட அச்சிறுவனை, Brussels நகரத்தின் முதல் குடிமகனாக பெருமைப்படுத்தி மக்கள் மதிப்பளித்தனர். அந்த சிறுவனின் நினைவாக தான் இன்றும் மணிக்கன் பிஸ் சிலை பாதுகாக்கப்படுகிறது.