• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-30 09:39:38    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி

cri
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மூலம், சொந்த நாட்டின் பண்பாட்டை அறிமுகப்படுத்த வேண்டுமென, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பலநாடுகள் விருப்பம் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் அரங்கு, நீரில் கட்டியமைக்கப்பட்டுள்ளதால், மிகவும் அழகான நகரச்சூழலை வெளிப்படுத்தும் என்று, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத்தின் துணைத் தலைவர் ஹுவாங் சியன் ச்சி கருதுகிறார். பிரான்ஸ் அரங்கின் உச்சியில், பிரான்ஸ் பாணியுடைய தோட்டம் உள்ளது. பயணிகள் மேற்கிலிருந்து கீழே செல்லும் வழியில் அதனை பார்வையிடுவார்கள். அவர் கூறியதாவது:

மக்கள், கண்ணால் கண்டும், காதால் கேட்டும் உணர்வுகளின் மூலம், ஒரு நகரைப் புரிந்துகொள்கின்றனர். இந்த அரங்கில், பிரான்ஸ் பண்பாட்டின் தனிச்சிறப்பியல்புகளை, அவர்கள் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம் என்று பிரான்ஸ் அரங்கு வடிவமைப்புக்குப் பொறுப்பாளர் ஒருவர் அறிமுகப்படுத்தினார்.
பண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம், வாழ்க்கை நிலை ஆகியவற்றை உணர்ந்துகொள்வதோடு, மகிழ்ச்சியை அனுப்பவிப்பது, உலகப் பொருட்காட்சியில் மிகவும் முக்கியமானது. நெதர்லாந்தின் அரங்கு, இத்தகைய மகிழ்ச்சியான உணர்வை தர முடியும். அதன் பெயரே, "மகிழ்ச்சி வீதி" தான். இதில், பல்வேறு கட்டிடங்கள்,

வளைந்து வளைந்து செல்லும் வீதியின் இரு பக்கங்களிலும் கட்டியமைக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சி வீதியின் வாயிலாக நடந்து, நெதர்லாந்தின் எதிர்கால சாலைகளையும், கட்டிடங்களையும் பார்த்து மகிழலாம். நெதர்லந்தின் உலகப் பொருட்காட்சி விவகார அலுவலகத்தின் தலைவர் WEI WEI LI அறிமுகப்படுத்தியதாவது:
நெதர்லந்து, புத்தாக்க கருத்துக்களையும் வடிவமைப்புகளையும் திரட்டி, மகிழ்ச்சியான நகரம் என்ற தலைப்புடன் இந்த அரங்கை, நிறைவேற்றுவோம். வணிகத்தன்மை நடவடிக்கைகளை நடத்துவதோடு, மக்கள், இவ்வீதியில் மேலும் நல்ல வாழ்க்கை சூழ்நிலையை உணர்ந்துகொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

7 கோடி இரசிப்பர்களை ஈர்ப்பது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் இலக்காகும். தனிச்சிறப்பியல்புகளை கொண்ட அரங்குகளைப் பார்வையிடுவது மட்டுமல்ல, பல்வேறு இடங்களின் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளையும் அப்போது பார்த்து ரசிக்கலாம். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையகத்தின் துணைத் தலைவர் ஹூ சின்சியுன் பேசுகையில், பல்வேறு நாடுகளின் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளை முழு உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், சீரான சூழ்நிலையை, இது வழங்கும் என்று தெரிவித்தார்.
அப்போது, நாள்தோறும் 100க்கு அதிகமான கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். 184 நாட்கள் நீடிக்கும் உலகப் பொருட்காட்சியில், அரங்கேற்றப்படும் கலை நிகழ்ச்சிகளின் மொத்த எண்ணிக்கை, 20 ஆயிரத்தைத் தாண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

துவக்க விழா, கொண்டாட்ட நிகழ்ச்சிகள், நாடுகளின் அரங்கு நடவடிக்கை நாள், நிறைவு விழா உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள், நடைபெறும். தவிர, ஒவ்வொரு இரவிலும், ஒலி, ஒளி மற்றும் பெரிய ரக கலை நிகழ்ச்சிகளும், வார இறுதி மற்றும் சிறப்பு நாட்களில் வாண வேடிக்கையும் நடத்தப்படும்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும் 6 திங்கள் காலத்தில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஓஷானியா, ஆசியா, சீனா என்ற ஒழுங்கில், வேறுபட்ட தலைப்புகளில் நடவடிக்கைகள் நடைபெறும். அப்பொழுது, நீங்கள் பல்வகை பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கலாம்.