 மக்களின் கடினமான போராட்டத்தால், இடிந்து விழுந்த பாறைகளால் சீர்குலைக்கப்பட்ட சிச்சுவான் Che Di Guan பாலத்தின் போக்குவரத்து, துண்டிக்கப்பட்ட 6 நாட்களுக்குப் பின், 31ம் நாள் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.
இப்பாலம், போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்ட போதிலும், வென்ச்சுவான் நிலநடுக்கம் மற்றும் அடுத்தடுத்த கடும் மழையால், இப்பாலத்தின் சுற்றுப்பிரதேசத்தில் பாறைகள் இடைவிடாமல் இடிந்து விழுத்து வருகின்றன. எதிர்காலத்தில், இப்பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 213இன் தங்கு தடையற்ற போக்குவரத்தை உத்தரவாதம் செய்யும் கடமை, இன்னும் கடினமாக இருக்கிறது. செய்தியாளருக்குப் பேட்டியளிக்கும் போது, சிச்சுவான் நெடுஞ்சாலை கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைமைப் பொறியியலாளர் யாங்யூங் இவ்வாறு தெரிவித்தார்.
|