• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-31 16:30:57    
துங் இனத்தின் விழாக்கள்

cri
Ganshe விழா

துங் இன மக்கள் பரந்த புல்வெளியில் கூடுவது வழக்கம். இது Ganshe என கூறப்படுகிறது. விழாவின் போது அனைவரும் கூடி வேளாண் உற்பத்தி பொருட்களை பரிமாறி கொள்கின்றனர். மகளிர் புதிய ஆடைகளை அணிந்து வெள்ளி அரங்காரங்களை அணிகின்றனர். மீன், இறைச்சி, சோறு ஆகியவற்றை பையில் வைத்து எடுத்து ஆண்களுடன் சாப்பிடுகின்றனர். தற்போது, Ganshe, இளைஞர்கள் காதலர்களை தேடுகின்ற விழாவாக மாறியுல்ளது.

மாடு போட்டி விழா

சந்திர நாட்காட்டியின்படி, 2வது மற்றும் 8வது திங்களில், துங் இன மக்கள் மாடு போட்டியை நடத்துகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் போட்டிக்கான மாடுகள் வளர்க்கப்படுகின்றன. மாடு மன்னரின் வீடு அரங்மணையாக கூறப்படுகிறது. சிறப்பு பணியாளர்கள் மாடு மன்னரை கவனிக்கின்றனர். தேன், அரிசியாலான மதுபானம் முதலியவற்றை மாடு மன்னர் சாப்பிடுகின்றனர். எனவே அவை மிக பலமாகவும் வலிமையாகவும் வளர்கின்றனர். கொம்புகள் கரண்டி போல் கூர்மையாக வளர்கின்றனர்.

விழாவுக்கு முன், இளைஞர்கள் பிற கிராமப்புறங்களுக்கு அழைப்பிதழ் வழங்குகின்றனர். பிறகு, மாடு மன்னரின் அரண்மனையில் 3 நாட்களாக வழிபாடு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். 2 தீபங்களை ஏற்றி மாடுகளுக்கு முன் வைக்கப்பது, விழாவின் துவக்கத்தை பொருட்படுகிறது. மக்கள் மாடுகளைக் கட்டிகின்ற வாரை கழன்றுவிட்டு, மாடுகள் போட்டியிட துவங்கும். போட்டியை கண்டளிக்கின்றவர்கள் ஆரவாரம் செய்து மகிழ்கின்றனர்.

தோல்வியடைந்த தரப்பின் வண்ண கொடி, வெற்றி பெற்ற தரப்புக்கு வழங்கப்பட வேண்டும். சில நாட்களுக்கு பின், இக்கொடி திரும்ப கொடுக்கப்படும். இதன் மூலம் நட்புறவை வெளிப்படுத்துகின்றனர். போட்டிக்குப் பின், துங் இன மக்கள் கலை நிகழ்ச்சி அரங்கேற்றங்களும் நடைபெற்று கொண்டாட்டம் செய்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, போட்டியில் வெற்றி பெற்ற மாடு மன்னர்கள், மாநிகரங்களுக்கு சென்று அரங்கேற்றம் செய்கின்றன. இதன் மூலம், மாடு போட்டியின் புகழ், மேலும் பரவலாகியது.