• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-31 11:03:52    
கிராமிய பெண்களின் உடல் நலத்துக்கு சுகாதாரத் திட்டம்

cri

கிராமிய பெண்களின் உடல் நலத்துக்கான சிறப்பு பொது சுகாதார திட்டங்களை சீன அரசு ஜுலை 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக துவக்கியது. மிகப்பல கிராமிய பெண்களின் உடல் நல நிலையை உயர்த்துவதோடு, நகருக்கும் கிராமத்துக்கும் இடையில் மருத்துவச் சிகிச்சை வசதிகளின் சமனற்ற பங்கீட்டை மேம்படுத்துவதற்கும், அடிப்படை பொது சுகாதார சேவையின் சரி சமநிலையை நனவாக்குவதை விரைவுபடுத்துவதற்கும் இது துணைபுரியும் என்று தொடர்புடைய பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர்.

கடந்த சில ஆண்டுகளில், மகளிர் மற்றும் குழந்தைகளின் உடல் நல காப்புறுதி துறையில் சீனா குறிப்பிடத்தக்க சாதனை பெற்றுள்ளது. கருப்பிணி மற்றும் மகப்பேறு பெற்ற பெண்களின் இறப்பு விகிதம், கைக்குழந்தைகளின் இறப்பு விகிதம், மருத்துவமனையிலான பிரசவ விகிதம் உள்ளிட்ட முக்கிய குறிக்கோள்கள் மேம்பட்டு வருகின்றன. ஆனால் சில பகுதிகளில் கிராமிய பெண் மற்றும் குழந்தைகளின் உடல் நல காப்புறுதியில் பல பிரச்சினைகள் நிலவுகின்றன. சீனச் சுகாதார அமைச்சகத்தின் துணை அமைச்சர் Liu Qian அறிமுகப்படுத்திக் கூறியதாவது—

"ஒன்று, வறுமையான மற்றும் ஒதுக்குப்புறமான பிரதேசத்தில் கருப்பிணி மற்றும் மகப்பேறு பெற்ற பெண்கள் சுகாதார வசதிகளைப் பயன்படுத்தும் விகிதம் குறைவு. இரண்டு, பிறப்பு குறைபாடு என்பது கடுமையான பொது சுகாதார பிரச்சினையாகவும் சமூக பிரச்சினையாகவும் மாறியுள்ளது. மூன்று, கிராமப்புறத்தில் breast புற்றுநோய் மற்றும் cervical carcinoma புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன் ஆண்டுக்கு அதிகரிப்பு வேகம் மேலை நாடுகளை விட அதிகம்" என்றார் அவர்.

இந்நிலைமை குறித்து, 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைமுறைக்கு வரும் 6 முக்கிய பொது சுகாதார சேவை திட்டங்களை சீனா ஜுன் திங்களில் அறிவித்தது. இவற்றில், நரம்பு குழாய் குறைபாடு தடுப்புக்கான folic அமிலம் நிறைவு செய்வதென்ற திட்டமும், கிராமிய பெண்களில் இரண்டு வகை புற்றுநோய்க்கான சோதனை திட்டமும் கிராமிய பெண் மற்றும் குழந்தைகளின் உடல் நல காப்புறுதிக்கான இரண்டு சிறப்பு திட்டங்களாகும். ஜுலை 6ஆம் நாள் இவ்விரு திட்டங்கள் அதிகாரப்பூர்வமாக துவங்கின. மேலும், சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்துள்ள கிராமிய கருப்பிணி மற்றும் மகப்பேறு பெற்ற பெண்கள் மருத்துவமனையில் பிரசவிப்பதற்கு உதவித் தொகை வழங்குவதென்ற திட்டமும் தொடரும். உதவித் தொகை வழங்கப்படும் அளவு முழு நாட்டிலுள்ள 31 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களில் விரிவாக்கப்படும். சீனச் சுகாதார அமைச்சகத்தின் துணை அமைச்சர் Liu Qian பேசுகையில், இந்தச் சிறப்பு திட்டங்களின் நடைமுறையாக்கம், சீனாவில் கோடிக்கணக்கான கிராமிய பெண்கள் நேரடியாக நன்மை பெறச் செய்யும் என்று கூறினார்.

இவ்வாண்டு ஏப்ரல் திங்களில் புதிய மருத்துவச் சிகிச்சை சீர்திருத்தத் திட்டத்தை சீன அரசு வெளியிட்டது. அடிப்படை பொது சுகாதார சேவையின் சரிசமநிலையை படிப்படியாக நனவைக்குவதென்ற இலக்கு முதல்முறை முன்வைக்கப்பட்டது. கிராமிய பெண்களுக்கான சிறப்பு பொது சுகாதார சேவை திட்டம், இவ்விலக்கின் நனவாக்கத்துக்கு இன்றியமையாத நடவடிக்கை ஆகும் என்று சீன சுகாதார அமைச்சகத்தின் மகளிர் மற்றும் குழந்தைகளின் உடல் நல காப்புறுதி மற்றும் குடியிருப்பு பிரதேச சுகாதார பிரிவுத் தலைவர் Yang Qing கருத்துத் தெரிவித்தார்.