• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-03 11:02:39    
மிரட்டும் காய்ச்சல்

cri

இக்காய்ச்சல் வந்துவிட்டால் அதன் அறிகுறிகள் இருக்கும் வரை அது பிறருக்கு பரவும் வாய்ப்பு உண்டு. நோய் தொடங்கிய ஏழு நாட்களில் இந்நோய் பிறருக்கு அதிகமாக பரவுகிறது. குழந்தைகள், குறிப்பாக சின்னஞ்சிறிய குழந்தைகளிடமிருந்து அதிக நாட்கள் நோய் பரவுமாம். பறவை காய்ச்சல் உருவாக காரணமாக இருக்கும் நச்சுயிரி தனது இயல்பையும், மரபணுவையும் அடிக்கடி மாற்றிக்கொள்வதை போல தான் பன்றிக்காய்ச்சல் நச்சுயிரியும் உள்ளது. எனவே இதனை தடுப்பதற்கென தடுப்பூசி இல்லை. சில நாடுகளின் சுகாதரா அதிகாரிகள் oseltamivir (Tami flu) அல்லது zanamivir (Relenza) என்று பொதுவாக நச்சுயிரி எதிர்ப்புக்கும், தடுப்புக்கும் பயன்படும் மருந்தை பன்றி காய்ச்சலின் நச்சுயிரிகளை தடுப்பதற்கும் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் உடலில் பரவியுள்ள பன்றி காய்ச்சல் நச்சுயிரி அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அதன் மேலதிக சிக்கல்களை தடுக்கலாம். இதற்கு எந்த தடுப்பூசிகளும் இல்லாததால் நச்சுயிரிகள் பரவாமல் தடுப்பதற்கான செயல்பாடுகளை நாம் நாள்தோறும் தொடர்வது அவசியம். இருமல் மற்றும் தும்மலுக்கு பின் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்வது, நோயாளிகளுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பது ஆகியவை முக்கியமானவை. இந்த காய்சச்ல் வந்துவிட்டால் அலுவலகத்திற்கோ அல்லது பள்ளிக்கோ செல்லாமல் பிறருடன் உள்ள தொடர்பை குறைத்து கொள்ள வேண்டும். நோயாளிகளின் கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாகத்தான் நச்சுயிரிகள் அதிகமாக பரவுகின்றன. எனவே நோயாளிகளின் இந்த உடல் உறுப்புகளை பிறர் மட்டுமல்ல நோயாளிகளும் தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம். நோய் வந்த பின்னர் அதனை தீர்க்க எடுக்கும் முயற்சிகளை விட நோய் வருமுன் காப்பதே மேல்.


1 2