• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-03 09:55:32    
பிரான்ஸ் நாட்டு மிதிவண்டி போட்டி

cri
96வது Tour de France எனும் France நாட்டின் பல பகுதிகளைக் கடந்து செல்லும் மிதிவண்டி போட்டி பெய்சிங் நேரப்படி ஜூலை திங்கள் 26ம் நாள் விடியற்காலை பிரான்ஸின் பாரிஸில் முடிவடைந்தது. கசகஸ்தானின் AST(அஸ்ட்னா) அணியின் ஸ்பெயின் வீரர் Contador 81 மணி 46 வினாடிகள் என்ற பதிவில், இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். 7 பிரான்ஸ் நாட்டு மிதிவண்டி போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்ற அவரது அணித்

தோழரான புகழ் பெற்ற அமெரிக்க வீரர் Armstrong இப்போட்டியின் 3வது இடம் பெற்றார். கசகஸ்தானின் AST(அஸ்ட்னா) அணி இப்போட்டியின் குழுச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.
10வது ஐரோப்பிய இளைஞர் கோடைகால ஒலிம்பிக் விழா 25ம் நாள் பின்லாந்தில் நிறைவடைந்தது. ரஷிய அணி 36 பதக்கங்கள் என்ற சாதனையுடன், பதக்க வரிசையில் முதலிடம் பெற்றது.
5 நாள் நீடித்த போட்டிகளில், 49 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 2350 இளம் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்று அறியப்படுகின்றது.

2009ம் ஆண்டு சர்வதேச தடகள கூட்டமைப்பின் இலண்டன் சாம்பியன் போட்டியின் 100 மீட்டர் ஆடவர் ஓட்டப்போட்டியில் புகழ் பெற்ற ஜமைக்கா வீரர் Bolt சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். நடப்புப் போட்டியில் தான் 85 விழுக்காடு முயற்சி செய்தார். ஆகஸ்டு திங்களில் நடைபெறும் உலக தடகள போட்டியில், தான் முழு மூச்சுடன் பாடுபடுவார் என்று அவர் கூறினார். 5 ஜமைக்கா தடகள வீரர்கள் ஊக்கமருந்துகளை பயன்படுத்தியது என்ற செய்தி தனக்கு பாதிப்பு என்பதையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஊக்கமருந்து சோதனைகளில், 5 ஜமைக்க தடகள வீரர்கள் தடை விதிக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டனர் என்று சர்வதேச தடகள கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் 24ம் நாள் தெரிவித்தார். ஜமைக்கா தடகள சங்கம்

இது பற்றி அறிக்கையை வெளியிட்டது. அதன் படி, கடந்த திங்களில் நடைபெற்ற ஜமைக்கா தடகள சாம்பியன் போட்டியின் ஊக்கமருந்து சோதனைகளில், 4 வீரர்களும் 1 வீராங்கனையும் தடைவிதிக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டது என்று சர்வதேச தடகள கூட்டமைப்பு கூறியது.
அவர்களில், 400 மீட்டர் ஆடவர் தொடர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட 2 வீரர்கள், 1600 மீட்டர் ஆடவர் தொடர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட 2 வீரர்கள், 400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட ஒரு வீராங்கனை ஆகியோர் இடம் பெற்றனர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அவர்கள் பதக்கங்களை பெறவில்லை என்று அறியப்படுகின்றது.