• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-04 14:29:15    
பெய்ஜிங்கின் கட்டிடவியல்

cri

நகரைச் சுற்றிய அரணை விட்டு வெளியேறவும், உள்ளே நுழையவும்தான் இந்த வாயில்கள் பயன்பட்டன, அது உண்மை. வாயில்கள் வருவதற்கும் போவதற்கும் தானே கட்டியமைக்கப்படுகின்றன. ஆனால் அதில் கூட அக்காலத்தில் பேரரசர்கள் வெவ்வேறு அம்சங்களை கடைபிடித்தனர். எடுத்துக்காட்டாக மிங் வம்சக்காலந்தொட்டே போருக்காக செல்லும்போது, மற்ற நுழைவாயில்களை விட தெஷெங்மென் வாயில் வழியாகத்தான் பேரரசர் படைகளோடு வெளியேறுவாராம். காரணம் தெஷெங் என்ற உச்சரிப்பு சீன மொழியில் வெற்றிபெறுதல் என்றும் பொருள்படுமாம். போர் முடித்து வீடு திரும்புகையில் ராணுவத்தினர் ஆண்டிங்மென் வழியாகத்தான் வருவார்கள். சீன மொழியில் ஆண்டிங்மென் என்றால் அமைதி வாயில் என்று பொருளாம். ச்சியான்மென் அல்லது ஷெங்யாங்மென் என்ற வாயில் பேரரசுருக்காக மட்டுமே சிறப்பாக வைக்கப்பட்ட வாயில் எனலாம். ஷுவான்வூமென் வாயில் சிறை ஊர்திகள் வெளியேறும் வாயிலாக இருந்தது. நிலக்கரியை சுமந்த வண்டிகள் ஃபூச்செங்மென் வழியாகவும், நீர் சுமந்த வண்டிகள் ஷிஷுமென் வழியாகவும் நுழைந்தன.

அந்த காலத்தில் இந்த வாயில்களை எழுத்துக்களாக எழுதும் போது கூட மிகவும் கவனமாக இருந்துள்ளனர். சீன எழுத்துக்களை நாம் பார்த்திருப்போம், அசைகளுக்கு ஏற்ற எழுத்துக்கள் கோடுகளின் தீட்டல்களாய், புரியாத நமக்கு கிட்டத்தட்ட ஓவியங்களாய் தெரியும். அத்தகைய எழுத்துக்களை கொண்டு வாயில் அல்லது கதவு என்ற சொல்லை வாயிலின் கதவில் சீன மொழியில் எழுதும்போது மேலே ஊசி அல்லது தூண்டில் முள் போன்ற அசைகளை பயன்படுத்தமாட்டார்களாம். காரணம் என்ன தெரியுமோ? பேரரசன் அக்காலத்தில் டிராகன் எனும் பறவை நாகமாக கருதப்பட்டார். பறவை நாகம் நீருக்குள் வசித்தது. நீருக்குள் வசிக்கும் பறவை நாகத்துக்கு தூண்டில் முள் அல்லது ஊசி என்றால் பயம். ஆக வாயிலில் அந்த வாயிலின் பெயரை எழுதும்போது முள் அல்லது ஊசி போன்ற எழுத்தை எழுதமாட்டார்கள்.

இன்றைக்கு இந்த வாயில்கள் நின்ற இடங்களில் மூன்று வாயில்கள் மட்டுமே அவற்றின் இடத்தில் உள்ளன. மற்றவையெல்லாம் அழிக்கப்பட்டன.

பெய்ஜிங் மாநகரின் மிக வசதியான போக்குவரத்தாக அமையும் நிலத்தடி தொடர்வண்டி செல்லும் பாதையில், பல்வேறு மன்களை கடந்து செல்லலாம். தொடர்வண்டி நிலையங்கள் பலவற்றின் பெயர்களில் இந்த மன்கள் இருக்கும். மன் என்பது வாயில் அல்லது கதவு என்று பொருள்படும். இந்த மன்கள் எல்லாம் அந்நாளைய வாயில்களாக இருந்த இடங்களின் பெயர்களாகும். அரணில் நுழையும் வாயிலாக இருந்த இடங்களில் இப்போது வாயில்கள் இல்லை ஆனால் அவற்றின் பெயர்களாலே வாயில் இருந்த இடங்கள் அழைக்கப்படுகின்றன.

இனி இந்த வாயில்களை பற்றி மேலதிக தகவல்கள்:

ச்சியன்மன் அல்லது ஷெங்யாங்மென்

பெய்ஜிங் நகரை சுற்றிய அரணில் நின்ற மிகப்பெரிய நுழைவாயில், தலைமை வாயில்தான் இந்த ஷெங்யாங்மென் எனும் ச்சியன்மன். இன்றளவும் ச்சியன்மன் பகுதியில் கம்பீரமாய் நிற்கும் இந்த வாயிலை நாம் காணமுடியும்.

25 மீட்டர் உயரமான இந்த ச்சியன்மன் நுழைவாயில், மிங் வம்சக்காலத்தின் துவக்கத்தில் கட்டியமைக்கப்பட்டதாம். அப்போது இந்த வாயிலில் மிகப்பெரிய ஒரு கண்காணிப்பு கோபுரமும் இருந்ததாம். ஆனால் தீவிபத்தார் சேதமடைந்த இந்த கண்காணிப்பு கோபுரம் பின்னாளில் 1610, 1780, 1894 ஆகிய ஆண்டுகளில் மறுபடி மறுபடி கட்டியமைக்கப்பட்டது. 1900ம் ஆண்டில் வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் இந்த கண்காணிப்புக் கோபுரமும், வாயிலும் சீர்குலைக்கப்பட்டன. பிறகு 1930ம் ஆண்டில் இந்த ச்சியன்மன் நுழைவாயில் மறுபடி கட்டியமைக்கப்பட்டது. பிறகு அண்மையில் இந்த வாயிலுக்கான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ச்சிங் வம்சக்காலத்தில் இந்த நடுவாயில் அல்லது மையவாயில் ஏறக்குறைய பேரரசரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாம். நாட்டின் நிலையை கண்டு வரவும், சொர்க்கக்கோயில் மற்றும் வேளாண் கடவுளான ஷியான்னுங்தானின் பீடத்தை சென்று பார்க்கவும் இந்த வாயில் வழியாகத்தான் பேரரசர் நகரிலிருந்து வெளியே புறப்படுவாராம். அரசியல் ரீதியான இந்த முக்கியத்துவத்தின் காரணமோ என்னவோ, பெய்ஜிங் வாசிகள் ச்சியான்மென்னை பண்டைய அரசகால பெய்ஜிங்கின் சின்னமாகவே கருதுகின்றனர்.