• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-04 14:38:58    
வணிக இணையத் தொழிலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் அ

cri
தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியால், சீனாவில் பல பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளைத் தேடிய போது இன்னல்களைச் சந்தித்துள்ளனர். ஆகையால், சொந்தமாக தொழில் நடத்த பலர் முயற்சிக்கின்றனர். பீக்கிங் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற 3 இளைஞர்கள் சொந்த முயற்சியுடன் ஒரு வணிக இணையத்தை ஆரம்பித்தனர்.

தற்போது, அக்கிமிமி என்று அழைக்கப்படும் ஓர் இணையதளம் பெய்ஜிங்கிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மிகவும் புகழ் பெற்றுள்ளது. விளையாட்டுச் சாதனங்கள், எண்ணியல் உற்பத்தி பொருட்கள், முக அலங்காரப் பொருட்கள் முதலியவற்றை இது விற்பனை செய்கின்றது. மலிவான விலை, நம்பகமான தரம் முதலிய காரணங்களால், இது விரைவில் பல்கலைக்கழகச் சந்தையில் வரவேற்பு பெற்றுள்ளது. பீக்கிங் பல்கலைக்கழகத்தின் குவாங் குவா நிர்வாக கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்ற xing nan, song ming hu ஆகிய இருவரும், கணினிப் பிரிவிலிருந்து முனைவர் பட்டம் பெற்ற wang rui என்பவரும் இந்த இணையதளத்தின் இயக்குநர்களாவர்.

சுமார் 10 சதுர மீட்டர் பரப்பிலான ஒரு சிறிய அலுவலகத்தில், 8 இளம் பணியாளர்கள் சுறுசுறுப்பாக கணினிக்கு முன் உட்கார்ந்து பணி புரிகின்றனர். இது தான் அக்கிமிமி கூட்டு நிறுவனம். இணையத் துறை நிர்வாக அபாயம் உள்ள துறையாகும். விலைப் போட்டி என்ற புதிய வழிமுறையைப் பயன்படுத்தி இந்த 3 இளைஞர்கள் இந்தக் கூட்டு நிறுவனத்தை ஆரம்பித்தனர். xing nan இந்தக் குழுவின் தலைவராவார். அவர் கூறியதாவது

நாள்தோறும் கிடங்கிலுள்ள பொருட்களையும், அவற்றின் விலைவாசிகளையும் சரிப்படுத்துகின்றோம். எடுத்துக்காட்டாக ஒரு செல்லிடபேசி பற்றி நாங்கள் முன்னரே பரிசோதித்த சுமார் 10 விநியோக வணிகர்கள் நாள்தோறும் புதிய விலைவாசியை எங்களுக்கு அறிவிக்கின்றனர். அந்த நாளில் மிக மலிவான விலையை வழங்கும் வணிகரை தேர்வு செய்து செல்லிடபேசிகளை வாங்குகின்றோம். எங்கள் இணையம் மூலம் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த வணிகர் நேரடியாக செல்லிடபேசியை விற்பனை செய்கின்றார் என்று அவர் அறிமுகப்படுத்தினார்.

பீக்கிங் பல்கலைக்கழகத்தில் மின்னணு வணிக சங்கத்தின் தலைவராக இருந்த xing nanக்கு இத்துறை பற்றிய அனுபவம் அதிகம். Amazon போன்ற பெரிய வணிக இணையம் தரமானது. சேவை நன்றாக உள்ளது. ஆனால், அவற்றின் கிடங்கில் சேமிக்கப்பட்ட வணிகப் பொருட்களும் அதிகமாக இருப்பதால், விலை ஓரளவு உயர்வானது என்று அவர் கருத்து தெரிவித்தார். வேறு சில உள்நாட்டு வணிக இணையங்களில் தனிநபர்களுக்கிடையில் நேரடி வியாபாரம் மேற்கொண்டதால், வணிகப் பொருட்களின் தரத்திற்கு உத்தரவாதம் கிடைப்பதில்லை. தனது இணையம், இரண்டு வகை இணையங்களின் குறைபாடுகளையும் தவிர்த்து, வளர்ச்சி வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சூழ்நிலை மாணவர்கள் தொழில் நடத்துவதற்கு வளர்ச்சிக்கு பயன் தந்துள்ளது என்று xing nan கூறினார். அவர் கூறியதாவது

நானும் zhu ming hu உம், சக மாணவர்களாவர். பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் ஆண்டில், தொழில் நடத்துவது பற்றிய போட்டிகளில் கலந்து கொண்டு, பெய்ஜிங் மாநகரின் சிறப்பு பரிசையும், நாட்டின் வெண்கல பதக்கத்தையும் பெற்றோம் என்று அவர் கூறினார்.

2006ம் ஆண்டு, பட்டதாரியாவதற்கு முன், இருவரும், வேறு சில சக மாணவர்களுடன் ஒரு பெரிய குடியிருப்புப் பிரதேசத்தில் உணவை வீட்டுக்கு கொண்டு வினியோகிக்கும் சேவை கூட்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தனர். இந்த நிறுவனம் இறுதியில் கலைக்கப்பட்டாலும், இதன் மூலம் கிடைத்த அனுபவம் அதிக பயன் தந்துள்ளது என்று zhu ming hu கூறினார். அவர் கூறியதாவது

ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்குவது எளிதானது. ஆனால், நடைமுறைப்படுத்துவது கடினமானது. மனித வளம், நிதி முதலிய இன்னல்களைச் சமாளிக்க வேண்டும். பிறகு, நிர்வாக பற்றாக்குறை என்ற பிரச்சினையைச் சந்திக்க வேண்டும். சந்தையில் பிற கூட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும் என்று அவர் கூறினார்.

பிறகு, wang rui என்பவருடன் சேர்ந்து அவர்கள் அக்கிமிமி எனும் வணிக இணையத்தை ஆரம்பித்தனர். உரிய நிர்வாக நடவடிக்கை மேற்கொண்டதால், தீவிர சந்தைப் போட்டியில் இந்த வணிக இணையம் குறிப்பிட்ட இடம் பெற்று, விரைவான வளர்ச்சி அடைந்து வருகின்றது. Zhu ming hu கூறியதாவது

வணிக இணையத்தை இயக்கும் அனுபவம் எங்களுக்கு குறைவு. ஆனால், பல்கலைக்கழகச் சந்தை பற்றி அறிந்து கொண்டுள்ளோம். இதர இணையங்களை விட, மாணவர்கள் மேலும் அக்கறைக் கொண்ட வணிகப் பொருட்களைத் எமது இணையத்தின் மூலம் தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. சந்தை பற்றி போதிய அளவில் அறிந்து கொண்டால் தான், நல்ல பயன் பெற முடியும் என்று அவர் கூறினார்.

அரை ஆண்டு கால முயற்சி மூலம், தற்போது, அக்கிமிமி இணையத்தில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட வகைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. திங்கள் விற்பனை தொகை 3 இலட்சம் யுவானை எட்டியுள்ளது.