அன்பான நேயர்களே!நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நிகழ்ச்சியின் தொடக்கமாக, மணமேடு எம்.தேவராஜா சீனாவில் இன்பப் பயணம் எனும் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். ஏப்ரல் திங்கள் 21ம் நாளன்று பெய்ஜிங் தாவர தோட்டம் எனும் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழுந்தேன். புகழ்பெற்ற சீன எழுத்தாளர் லாவு சோவை சிறப்பிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள தேனீர் விடுதியில் தேநீரை அருந்தி கொண்டே, பூத்துக்குலுங்கும் பீச் மலர்களையும் பண்ணாட்டு மலர் காட்சிகளையும் கண்ட போது மனதுக்கு மகிழ்வாகவும், உடலுக்கு புத்துணர்வாகவும் இருந்தது. கேட்ட எனக்கு இந்த அனுபவம் என்றால் நேரில் பார்ப்போரின் குதூகலத்தைப் பற்றி கூறவும் வேண்டுமா? 2001ம் ஆண்டு ஏப்ரலில் சீன பயணம் மேற்கொண்ட என்னை இங்கு அழைத்துச் செலாதது. சீனப் பயணம் மேற்கொள்ளும் நமது நேயர்களுக்கு இங்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு அன்புடன் வேண்டுகின்றேன். அடுத்து இலங்கை நேயர் மட்டக்களப்பு டி, பிரவீந்த் அனுப்பிய கடிதம். எனக்காக அனுப்பப்பட்ட XUE SHUO ZHONG GUO HUA அதாவது தமிழ் மூலம் சீனம் என்ற புத்தகமும் கடிதமும் கிடைத்தது. மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றேன். சீன மொழியை படித்து அதில் தேர்ச்சி பெற்ற ஏதோ ஒரு நாள் சீனாவை அடையும் போது சீன மொழியில் உரையாடப் போகும் கனவிற்கு அடித்தளமாகவும், அத்திவாரமாகவும் இத்தகைய புத்தகம் கிடைத்தது மகிழ்ச்சி தான். மீண்டும் தமிழ் பிரிவின் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
உங்கள் நிகழ்ச்சிகள் மூலம் நாம் பல தரப்பட்ட சீனா பற்றிய செய்திகளை அறிந்து கொள்கின்றோம். இலங்கையில் பல வானொலி நிலையங்கள் காணப்படுகின்றன. ஆனால், எவையும் பிரம்மாண்டமான முறையில் மிகப் பரந்த அடிப்படையில் நிகழ்ச்சிகளை உலகம் முழுவதிலும் ஒலிபரப்பியதில்லை. சீன வானொலி நிலையத்துக்குப் பாராட்டுக்கள். அடுத்து, வளவனூர் வ.உ.கல்பனா நட்புப்பாலம் நிகழ்ச்சி மூலம், சீன வானொலி நடத்திய பொது அறிவுப்போட்டிகளில் சிறப்பு பரிசு பெற்ற சீனாவில் பயணம் மேற்கொண்ட பல நேயர்களின் உரையாடல்களைக் கேட்டேன். இத்தகைய நிகழ்ச்சி புதிய நேயர்களுக்கு ஊக்கம் அளிப்பது உறுதி. சிறப்புப் பரிசைபெற என்ன செய்ய வேண்டும்? நேயர் மன்ற நடவடிக்கைகளில் எப்படி ஆர்வத்துடன் பங்கெடுப்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணும் வகையில் தெள்ளத் தெளிவாக இந்நிகழ்ச்சியில் உரையாடி அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு எஸ். செல்வம் அவர்களின் உரையாடல் அமைந்தது. அடுத்து சென்னை-5 எஸ்.ரேணுகாதேவி நவீன சீனாவின் வைர விழா பற்றி ஒரு கவிதை எழுதி அனுப்பினார். கேளுங்கள்.
தானை எடுத்தேன் வாழ்த்து மடல் எழுத்தால் எண்ணங்கள் எழுச்சியில் பேனாமுனை விரைந்திட சர்வதேச வானொலி கோலமாய் வண்ணத்தின் பூக்களாய் மலர்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சீன பொருளாதர மும்மடங்கு உயர் தனில் கார்முகில் குளிர்ந்த நிலைவாய் வளரும் நாடுகளுக்கு உதவியாய்
நிதி பொருளாதார கண்ணா மூச்சி ஆடும் உலகளவில் சீர்திருந்த்த பொருளாதார முண்ணனியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முன்னணியிலும் பசு கூட வாயு கட்டுப்படுத்தி சுவதியுறும் மக்கள் மனதில் இன்னமும் உயர்வில் நவீன சீனா பல்லாண்டு. நல வளத்தில் வாழ்க, வளர்கவே விழுப்புரம், எஸ். பாண்டியராஜன்
அன்றாட சீன மொழி நிகழ்ச்சி கேட்டேன். அதில் சீனமொழி வரலாறு, எழுத்து உச்சரிப்பு பற்றி கூறியது, சீன மொழியின் அடிப்படை இலக்கணம் என்று கூறலாம். ஒரு எழுத்து நான்கு விதமாக உச்சரிக்கப்படுகிறது. அப்படி உச்சரிக்கும்போது நான்கு வகையான பொருள் தரும் என்பதும் தெரியவந்தது. இந்தி மொழியிலும் இதேபோன்றுள்ளது. முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் செய்திதொகுப்பில், இத்தாலியில் பயணம் மேற்கொண்ட சீன அர்சுத்தலைவர் ஹூசிந்தாவ் அவர்களின் பயணம் ஆக்கப்பூர்வமாக இருப்பதை அறிந்தேன். இருநாட்டுக்கும் இடையில் பயன்மிக்க எட்டு உடன்படிக்கைகளை கையெழுத்திட்டதாக அரசுத்தலைவர் ஹூசிந்தாவ் அவர்களும், இத்தாலி அரசுத்தலைவரும் நிறைவேற்றி இருக்கின்றார்கள். பொருளாதாரம், வர்த்தகம், பன்பாடு, பாதுகாப்பு போன்ற முக்கியத் துறைகளின் ஒப்பந்தங்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மதுரை அண்ணாநகர் ரா.அமுதாராணி இன்றைய உலகில் காணப்படும் பல்வேறு பிரச்சனைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் ஆகியவை மிக முக்கியமானவைகளாகும். இந்த பிரச்சனையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பங்குண்டு. மக்களை ஈடுபடுத்தி கழிவுப்பொருட்களை குறிப்பாக அடுக்களை கழிவுப்பொருட்களை கையாளும் முறை பெய்ஜிங்கில் அறிமுகமாகியிருப்பது ஒரு முன்மாதிரியான திட்டம். இது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மீனாட்சிபாளையம், கா. அருண் உறும்ச்சி நகரில் பொதுப் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை மீட்கப்பட்டுள்ளதையும் அங்கு கடைகள் மற்றும் பிற அங்காடிகள் பெறுமளவு இயங்குவதையும் அறிந்து மகிழ்ந்தேன். விரைவாக செயல்பட்டு இயல்பு நிலையை மீட்ட உள்ளூர் அரசிற்கு பாராட்டுக்கள். 。。。。。。மதுரை-20 என்.ராமசாமி。。。。。。 சீனநடுவன் அரசு சர்வதேச நீதிநெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு பல துறைகளில் பல பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறுகியக்கால பொருளாதார ஊக்குவித்தலை கூட்டியும் நீண்டக்கால கட்டமைப்பு திட்டத்தையும் இணைக்க முயற்ச்சி செய்து வருகிறது என்பது குறிபிடதக்கது. மலிவன வீட்டு பயன்பாட்டுமீன்சாதன உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் தொடர்ப உடைய சாதனைகளை வாக்கிய விவசாயிகளுக்கு அரசு மாணியம் வழக்கும் திட்டம் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது இதற்க்காக கணிசமான நிதி ஒதிக்கிடு செய்து உள்ளது இது முன்மாதிரியானது. நிதி நெருக்கடி சீனாவிற்கு ஒரு வாய்ப்பு வழக்கி உள்ளது என கூறலாம் சீனாவின் பொருளாதார கட்டமைப்பில் முதலீடு நுகர்வு ஆகியவை சீனாவிற்கு நிதி நெருக்கடியிலிருத்து மீள உதவிபுரியும் என்பது திண்ணம் மேலும் சீனாவின் தொழில் துறை மேம்பட்டு வருகிறது என்பது கண்கூடு.
。。。。。。வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்。。。。。。 ஜுலைத் திங்கள் 18 ஆம் நாள் இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினைக் கேட்டேன். •வெளிநாட்டவர் பார்வையில் சீனா• என்ற கட்டுரை எனக்குப் பிடித்திருந்தது. இன்றைய நிகழ்ச்சியில், சீன மற்றும் மங்கோலிய எல்லையில் அமைந்திருக்குமம ஹரகோட் என்ற நகரம் கடந்த முப்பது ஆண்டுகளில் அடைந்த மாபெரும் வளர்ச்சியைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் தாழ்நிலையில் இருந்த இந்நகரம், தற்போது கல்வி மற்றும் வணிகம் ஆகியவற்றில் மங்கோலியர்களை ஈர்க்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. சீனாவின் உரிமைப் பிரதேசத்தில் அமைந்துள்ள, அதே வேளையில் மங்கோலியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்ற இந்நகரம் ஒரு வித்தியாசமான நகரம்தான். அன்றி, அந்நியர்கள் ஆயினும் மங்கோலிய நாட்டவரின் நலனைக் கருத்தில் கொண்டு உயர்நிலை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வசதி வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதையும் நான் வரவேற்கின்றேன்.
•வெளிநாட்டவர் பார்வையில் சீனா• என்ற நிகழ்ச்சி தொடர்ந்து ஒலிபரப்பாக ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டால், நேயர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெறும். சீனாவின் Beijing Review இதழ் ஒவ்வொன்றிலும் வெளிநாட்டவரின் சீனப் பயண அனுபவங்கள் இடம்பெறும். வாரந்தோறும் அவற்றை மொழிபெயர்த்தாலே ஒரு சுவையான நிகழ்ச்சி உருவாகும். நன்றி. வணக்கம்.
|