• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-04 11:03:16    
மக்களின் நலனுக்காக

cri
நேயர்களே, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில், சீனாவின் அரசியல் முன்னேற்றப் போக்கு இடைவிடாமல் மேம்பட்டுள்ளது. இந்தப் போக்கில், மக்களின் உரிமையும் நலனும் முதலிடத்தில் வைப்பது என்ற அடிப்படை கோட்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

 60 ஆண்டுகளுக்கு முந்தைய அக்டோபர் முதல் நாள், சீன அரசுத் தலைவர் மாவ் சே துங் தியேன் ஆன் மன் கட்டிடத்தில் நின்று சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதாக அறிவித்தார். அத் தருணம் முதல், சீனாவில் மிக அதிக மக்களின் ஆதரவை பெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கட்சியாக மாறி, மக்களின் சார்பில் தேசிய அதிகாரத்தை நடைமுறைப்படுத்தத் துவங்கியது.

மக்களின் உரிமையையும் நலனையும் எப்படி பிரதிநிதித்துவப்படுத்தி உத்தரவாதம் செய்ய வேண்டும். தலைவர் மாவ் மிக முன்னதாக இது பற்றி யோசித்தார். 1945ஆம் ஆண்டு ஜுலை திங்களில், அவருக்கும் புகழ்பெற்ற ஜனநாயகப் பிரமுகர் ஹுவாங் யேன் பெய்க்கும் இடையில் நடைபெற்ற உரையாடலில் இது பற்றி தனது கருத்தை தெளிவாக தெரிவித்தார். சீனச் சமூக அறிவியல் கழகத்தின் துணைத்தலைவர் லீ சென் மிங் அப்போதைய நிலைமை பற்றி கூறியதாவது

 

வரலாற்றில் குறிப்பிட்ட விதிகள் கண்டறியலாம் என்று திரு ஹுவாங் யேன் பெய் கூறினார். புதிய வழியைக் கண்டறிந்துள்ளோம் என்று தலைவர் மாவ் சே துங் கூறினார். மக்கள் அரசைக் கண்காணிக்க வேண்டும். இப்படி செய்தால் தான், அரசு தவறாக செயல்படாது என்று தலைவர் மாவ் கூறினார்.

நவ சீனா நிறுவப்பட்டப் பின், தலைவர் மாவ் தெரிவித்த இப்புதிய சிந்தனை நனவாக்கப்பட்டது. 1954ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரில், சீனாவின் முதலாவது அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீன மக்கள் குடியரசின் அதிகாரம் அனைத்தும் மக்களுக்குரியது என்று இச்சட்டத்தில் விதிக்கப்பட்டது.

தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறை சீனாவின் அடிப்படை அரசியல் அமைப்புமுறையாகும். அதன் பிரநிதிதிகள் பொது மக்களால் ஜனநாயகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்புமுறை மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது.

கடந்த 30 ஆண்டுகளில், சீனாவின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. சட்டமியற்றல் உள்ளிட்ட சீனாவின் பல்வகை அரசியல் பணிகள் மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளில் கவனம் செலுத்துகின்றன.

இவ்வாண்டின் துவக்கத்தில் சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ இப்பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் கூறியதாவது

 

மனித முதன்மை என்ற கருத்தில் ஊன்றி நின்று, மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பது, நிரந்தரக் கமிட்டிப் பணியின் முக்கிய பகுதியாகும். சட்டமியற்றலையும் கண்காணிப்பையும் இணைத்து, சட்ட விதிகளை மேம்படுத்த வேண்டும். மக்கள் பேரவைப் பணியை மேலும் அதிக பயன் பெற செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

எடுத்துக்காட்டாக, 2008ம் ஆண்டில் சீனத் தேசிய மக்கள் பேரவையும் அதன் நிரந்தரக் கமிட்டியும் ஏற்றுக்கொண்ட உணவுப் பொருள் பாதுகாப்புச் சட்டம், உடல் திறன் சவால் கொண்டோர் உத்தரவாதச் சட்டம் ஆகியவையும் 2009ம் ஆண்டில், பரிசீலனை செய்யப்படும் சமூகக் காப்புறுதிச் சட்டம், சமூக மீட்புதவிச் சட்டம் ஆகியவையும் பொது மக்களின் உரிமை மற்றும் நலன்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்ட சட்டங்களாகும்.

தவிர, சீனாவின் சட்டமியற்றல் வழிமுறை மேலும் வெளிப்படையாகவும் ஜனநாயகமாகவும் மாறி வருகின்றது. தற்போது, சீனாவில் பரிசீலனை செய்யப்படும் வரைவுச் சட்டங்கள், இணையம், செய்தியேடு, வானொலி மற்றும் தொலைக்காட்சி முதலியவற்றின் மூலம் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிகின்றன.

தேசிய விவகாரங்கள் முதல் குடியிருப்புப் பகுதியின் விவகாரங்கள் வரை, பொது மக்கள் சமூகப் பொது விவகாரங்கள் பற்றிய தீர்மானம், நிர்வாகம் மற்றும் கண்காணிப்பில் கலந்து கொள்கின்றனர்.

சொந்த ஊரின் அதிகாரி தேர்தல் மற்றும் கண்காணிப்பில் 90 கோடி விவசாயிகள் மேலும் அதிகமான அதிகாரம் பெற்றுள்ளனர். கிராமவாசிகள் கமிட்டி அமைப்பியல் சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த கடந்த 2 ஆண்டுகளில், சீனாவில் சுமார் 60 கோடி விவசாயிகள் நேரடித் தேர்தலில் கலந்து கொண்டனர் என்று தெரிகின்றது.