• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-05 15:13:01    
2009 வில்வித்தை உலகக் கோப்பை

cri
2009ம் ஆண்டு வில்வித்தை உலகக் கோப்பை 4ம் நாள் சீன கிழக்குப்பகுதியிலுள்ள ஷாங்ஹாய் மாநகரில் துவங்கியது. 31 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 217 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர். உலகத் தரவரிசையின் முதலிடத்தை வகிக்கின்ற புகழ்பெற்ற தென்கொரிய வீராங்கனை யுன் ஒக் ஹியும் இதில் கலந்துகொள்வார்.

2009ம் ஆண்டு சீன தேசிய சதுரங்க தொடர்போட்டியின் பெய்ஜிங் போட்டி 3ம் நாள் பெய்ஜிங்கில் முடிவடைந்தது. கடந்த சாம்பியன் பட்டம் பெற்ற ஷாங்ஹாய் அணி, 9வது சுற்றுப்போட்டியில் ச்சியாங் சு அணியை தோற்கடித்து, தரவரிசையில் முதலிடத்தை வகிக்கின்றது.
6ம் நாள் சீன தியன் ச்சின் நகரில், 25வது ஆசிய ஆடவர் கூடைப்பந்து சாம்பியன்பட்டப் போட்டி நடைபெறவுள்ளது. ஆசியாவின் 16 அணிகள் இப்போட்டியில் கலந்துகொள்ளும்.

கட்டத்துக்குள் ஆடப்படும் ஆடுபுலி ஆட்டம் போன்றது வெய்ச்சீ. பெய்ஜிங் நேரப்படி 3ம் நாள் பிற்பகல், 14வது உலக வெய்ச்சீ மாஸ்டர் போட்டிக்கான தேர்வுப் போட்டியின் முதல் சுற்றுப் போட்டி, தென்கொரியாவில் துவங்கியது. சீன வீரர் யு பின், தென்கொரிய வீரர் கிம் சுன் ஜொன்னை தோற்கடித்து, அடுத்த சுற்றில் நுழைந்துள்ளார்.
3ம் நாளிரவில், சீனாவின் நடுப்பகுதியிலுள்ள வூ ஹான் நகரில் நடைபெற்ற 2009ம் ஆண்டு ஆசிய இளைஞர் மகளிர் கால்பந்து போட்டியில், சீன அணி, 2-1 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்ற பின், சீன அணி, B குழுவிலிருந்து அடுத்த கட்டப்போட்டியில் நுழைந்தது.

தொடர்போட்டிக்கான நிகழ்ச்சி நிரலை அமெரிக்க கூடைப்பந்து சம்மேளனம் 4ம் நாள் வெளியிட்டது. இவ்வாண்டு அக்டோபர் 27ம் நாள் இப்போட்டி துவங்கும். முதல் போட்டியில் பாஸ்டன் செல்டிக்ஸ் மற்றும் க்ளீவ்லேண்ட் கேவலியர்ஸ் அணிகள் கலந்துகொள்ளும்.
30 அணிகள், மொத்தமாக 1230 போட்டிகளில் கலந்துகொள்ளும். அனைத்து அணிகளும் தலா 82 போட்டிகளில் மோதும். கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலுள்ள முதல் 8 அணிகள், இறுதிக்கட்டப்போட்டியில் கலந்துகொள்ளும்.
இத்திட்டப்படி, இறுதிப் போட்டி, 2010ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் நடைபெறும்.