பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான விருப்பம்
cri
தூய்மைக்கேடற்ற உலகப் பொருட்காட்சி என்ற சொந்தமாக பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் அமைப்புமுறையையும், இது பற்றிய வர்த்தக மேடையையும் அதிகாரப்பூர்வமாக திறக்க சீன சுற்றுச்சூழல் எரியாற்றல் பரிமாற்றச் சந்தை அண்மையில் அறிவித்தது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பணியகத்தின் புள்ளிவிபரங்களின் படி, சுமார் 7 கோடி பயணிகள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடுவர். இக்காலத்தில், 90 இலட்சம் டன் கரி வெளியேற்றப்படும். உலகப் பொருட்காட்சி தரப்பு சிறப்பு தொழில் நுட்பம் மூலம் 15 இலட்சம் டன் கரி வெளியேற்றத்தைக் கையாளும். எஞ்சிய பகுதி பொது மக்களால் சொந்த செலவில் கையாளப்படும். அதாவது, மக்கள் மேற்கூறிய சந்தை உருவாக்கிய மேடை மூலம், சொந்த பயணத்தில் உருவாக்கிய கரி வெளியேற்றத்தை கட்டணம் செலுத்துவதன் மூலம் வாங்கலாம். இந்தக் கட்டணம் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் பயன்படுத்தப்படும் என்று தெரிகின்றது.
|
|