உலகை சுற்றி


Dilip Donde என்ற இந்திய விமானப்படை அதிகாரி பாய்மரப்படகில் உலகை சுற்றிவர திட்டமிட்டுள்ளார். இந்தியாவின் சுதந்திர நாளான, ஆகஸ்ட் 15 ஆம் நாள் இப்பயணத்தை தொடங்க முடிவு செய்துள்ள அவர், இம்முயற்சியில் வெற்றியடைந்தால், பாய்மரப்படகில் உலகை சுற்றிவந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார். மூன்று ஆண்டுகள் படைப்பயிற்சி பெற்றும், 20 ஆண்டுகள் விமானப்படையிலும் பணிபுரிந்தும் வந்துள்ள இவர் 35,000 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்யவுள்ளார். ஆஸ்திரேலியாவின் Fremantle , நியுசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச், அர்ஜென்டீனாவுக்கு அருகில் பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள மால்வினாஸ் தீவுகள், தென் ஆப்பிரிக்காவிலுள்ள கேப் டவுண் ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே நிறுத்தி, பின்னர் பணயத்தை மேற்கொள்வார். இவர் பயணம் செய்யவுள்ள மகாதேய் என்ற பாய்மரப்படகு 23 டன் எடையுடையது. 17 மீட்டர் நீளமான இது 4 கோடி ரூபாய் மதிப்புடையது.
கடலடியில் ஆய்வு
2011 ஆம் ஆண்டு சீன விண்வெளி மையத்தை விண்வெளியில் நிறுவதற்கு ஆயத்தம் செய்துவரும் சீனா, கடலின் 7000 மீட்டருக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறது. ஆழ்கடலில் ஆய்வு செய்கின்ற மூன்று வீரர்களோடு நீர்முழ்கி கப்பலொன்று இவ்வாண்டு வெள்ளோட்டம் விடப்படும் என்று தேசிய கடல்வள நிர்வாக இயக்குனர் Sun Zhihui தெரிவித்தார். இந்த வெள்ளோட்டம் வெற்றிபெற்றால் ஆழ்கடலில் அதிக மீட்டர் ஆழத்தில் ஆய்வு செய்வதில் சீனா உலகளவில் முதலிடம் பெறும். இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள நீர்முழ்கி ஆய்வுக் கப்பல்கள், கடலின் 6,500 மீட்டர் ஆழம் வரை மட்டுமே செல்லக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி ஆழ்கடல் மற்றும் துருவ பகுதிகளிலான ஆய்வுகளில் அதிக பங்காற்றும்.
|