• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-06 14:57:46    
சியென் தெள ஹு என்னும் ஏரி

cri
சீனாவின் சேசியாங் மாநிலத்தில் சியென் தெள ஹு என்னும் ஏரி, ஒளிமிக்க ஒரு முத்து போல் அமைந்துள்ளது. இந்த ஏரியில், 1078 தீவுகள் உள்ளன. ஷாங்காய் மாநகர் அடங்கிய யாங்சி ஆற்றுக்கழிமுகப் பிரதேசத்தின் பூங்காவாக இது, அழைக்கப்படுகிறது. ஷாங்காயிலிருந்து சியென் தெள ஹு இயற்கைக் காட்சி மண்டலத்துக்கு செல்லும் சுமார் 300 கிலோமீட்டர் வழியில், சுற்றுலாப் பேருந்து மற்றும் இருப்புப்பாதை போக்குவரத்து, வசதியாக இருக்கிறது.
சியென் தெள ஹு காட்சி மண்டலத்தில் இயற்கைக் காட்சிகள், மிகவும் அழகானவை, உயிரினச் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கிறது. சீனாவின் முதலாவது தொகுதி தேசிய நிலை காட்சித் தலங்களில் இது இடம்பெறுவது மட்டுமல்ல, சீனாவின் மிகப் பெரிய வனப் பூங்காவாகவும், சர்வதேச தோட்ட நகரமாகவும் இது வளங்குகிறது.

சியென் தெள ஹு ஏரியின் மொத்த பரப்பளவு, 573 சதுர கிலோமீட்டராகும். அதன் சாராசரி ஆழம், 34 மீட்டர். தரமிக்க இந்த ஏரியின் நீர், சீனாவின் முதலாவது நிலை நீர் வரையறையை எட்டியுள்ளது. இதை நேரடியாக குடிக்கலாம்.
இந்த தூய்மையான ஏரியில், முதல் தர மீன்பிடித்தொழில் மூலவளங்கள் வளர்க்கப்படுகின்றன. இதனால், சியென் தெள ஹு ஏரி, நன்னீர் மீன்களைப் பெருக்கும் களஞ்சியமாக மாறியுள்ளது. இங்கு 87 வகை நன்னீர் மீன்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகால வளர்ச்சி மூலம், இது, சீனாவின் முதலாவது மாசுபாடற்ற மீன் உற்பத்தித் தளமாக மாறியுள்ளது.
இப்பொழுது, சியென் தெள ஹுவின் அழகான இயற்கைக் காட்சியைக் கண்டு களித்து, மாசுபடாத மீன் உற்பத்தித் தளத்தின் உணவுகளை உண்டு ரசிப்பது, சியான் தேள ஹுவில் படிப்படியாக பரவலாகியது. எழில்மிக்க நீர் வாழ்வினங்களைக் கொண்டதால், மீன் உணவு வகைகளை முக்கியமாக வினியோகிக்கும் உணவு விடுதிகளின் வணிகம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தற்போது, சியென் தெள ஹு

ஏரிக்கு அருகிலுள்ள, சுற்றுலா உணவு விடுதிகளின் எண்ணிக்கை, சுமார் 150 ஆகும். பயணிகள் இங்கு வந்து சுற்றுலா மேற்கொள்ளும் போது, தனிச்சிறப்பான மீன் வறுவல்களைச் சுவைப்பது உறுதி. உள்ளூரின் உணவு விடுதிகளில், மீன் சுவை என்னும் உணவு விடுதி குறிப்பிட்டத்தக்கது.
ஷாங்காய் மாநகரிலிருந்து வந்த பயணி சென் ரொங் ஹுவா, அவருடைய நண்பர்களுடன் இணைந்து, மீன் உணவு வகைகளைச் சுவைக்க இந்த புகழ்பெற்ற உணவு விடுதிக்கு வந்தார். சென் ரொங் ஹுவா கூறியதாவது:
நல்ல சூழ்நிலையில் வளர்க்கப்படும் மீன்களைப் பயன்படுத்தி, இந்த புகழ்பெற்ற உணவு விடுதி சமைத்த மீன் உணவு வகைகள் சுவையாக இருக்கின்றன என்று அவர் பாராட்டினார்.

அழகான சுற்றுச்சூழல், தூய்மையான நீர் மற்றும் காற்று, சீரான காலநிலை ஆகியவற்றினால், சியென் தெள ஹு ஏரி, நீர் விளையாட்டுகளை நடத்தக்கூடிய வசதியையும் மேம்பாட்டையும் கொண்டுள்ளது. 2005ம் ஆண்டு, சீனத் தேசிய நீர் விளையாட்டுப் பயிற்சித் தளத்தை இங்கு கட்டியமைக்க சீன விளையாட்டு ஆணையம் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்தது. 2007ம் ஆண்டின் பிப்ரவரி திங்களில், உள் அரங்க விளையாட்டுப் பயிற்சி, கல்வி மற்றும் அறிவியல் ஆய்வு, உடல் பயிற்சியகம் முதலிய வசதிகள் அடங்கிய சீனத் தேசிய நீர் விளையாட்டுப் பயிற்சித் தளம், இங்கே கட்டியமைக்கப்பட்டது. சீன விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நீர் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு, தலைசிறந்த சாதனை பெற்றியதற்கு இது நல்ல வசதிகளை வழங்கியது.

சியென் தெள ஹு ஏரியின் முக்கிய ஈர்ப்பு ஆற்றல், நீரே. ஆற்றில் தெப்பம் விடும் விளையாட்டு நடவடிக்கையின் மூலம், பயணிகள், பளிங்கு போன்ற ஏரி நீரை நேரடியாக தொட்டு உணர்ந்துகொள்ளலாம்.
ஆற்றில் தெப்பம் விடும் விளையாட்டைத் தவிர, சியென் தெள ஹுவில், நீர் பொழுதுபோக்கு இடம் உள்ளது. இங்கு, மோட்டார் படகு ஓடுதல், இயந்திர விசைப்படகு பயணம், நீர் மிதிவண்டி, நீர் வான் குடை மிதவை முதலிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ஏராளமான பயணியர்களை ஈர்க்கின்றன.