• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-07 09:51:34    
அன்னிய தொழில் நிறுவனங்களின் உற்சாகமான முதலீடு

cri
2008ம் ஆண்டு மே திங்கள் 12ம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் வென்ச் சுவானில் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்தில், பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்புகள் ஏற்பட்டன. கடந்த ஓர் ஆண்டில், சிச்சுவான் மாநிலத்திலுள்ள பல்வேறு நிலை அரசுத் துறைகள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனங்களுக்கு, நிலநடுக்கத்தின் பாதிப்பிலிருந்து விரைவாக விடுபட உதவியளிக்கின்றன.

சிச்சுவான் மாநிலத்திலுள்ள cheng du நகரில் புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசம், சீனாவிலுள்ள தேசிய நிலை புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசங்களில் ஒன்றாகும். அதுவும், சிச்சுவான் மாநிலத்தில் அன்னிய தொழில் நிறுவனங்கள், அதிகமாகவுள்ள இடமாகும். அமெரிக்காவின் Motorola, ஜெர்மனியின் Siemens, ஜப்பானின் Sumitomo முதலிய 400க்கு அதிகமான புகழ் பெற்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள், இங்கு அமைந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், cheng du புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசத்தில் Ericsson தொழில் நிறுவனம், தனது ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவியது. Ericsson தொழில் நிறுவனத்தின் தலைவர் kong xian dong கூறியதாவது

2004ம் ஆண்டு, தனது ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை Ericsson தொழில் நிறுவனம் இங்கே நிறுவியது. உள்ளூர் அரசு இதற்கு பேராதரவு வழங்கியது. இங்கு, உயர் கல்வியறிவை கொண்ட பணியாளர்களை பணிக்கமர்த்த முடிகிறது. ஏனென்றால், இங்கு, சிச்சுவான் பல்கலைக்கழகமும், cheng du மின்னணு மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகமும் உள்ளன. தவிர, ஷாங்காய், பெய்ஜிங் முதலிய சீனாவிலுள்ள பிற மாநகரங்களை விட, cheng duவில் முதலீட்டுச் செலவு, குறைவாக இருக்கின்றது. எனவே cheng duஇல் எமது ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவினோம்.

Ericsson தொழில் நிறுவனம் போல, வேறு பல தொழில் நிறுவனங்களும், chen duஇன் சிறப்பான முதலீட்டுச் சுற்றுச்சூழலை தேர்ந்தெடுந்துள்ளன. அவை, chen du நகரில் முதலீடு செய்து, தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன. Chen du yu bi கணினி மென்பொருள் கூட்டு நிறுவனத்தின் தலைவர் cao jian wei கூறியதாவது

சிறப்பான அடிப்படை வசதி, chen duஐ நாங்கள் தேர்ந்தெடுக்க முக்கிய காரணங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு மே திங்கள் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போதும், அதற்கு பிறகும் தொடர்ந்து பணி செய்து இருந்தோம். அலுவலகத்தின் மின்சார வினியோகமும் இணையமும் இயல்பாக இருந்தன. Chen duஇல் முதலீடு செய்வது, சரியான தெரிவாகும். ஏனென்றால், இங்கு, சிறப்பான அடிப்படை வசதிகள் உள்ளன. அத்துடன், இது, பாதுகாப்பான இடமாகும்.

சிச்சுவானிலுள்ள பல்வேறு அரசுகளின் முயற்சியால், கடும் நிலநடுக்கத்துக்குப் பிறகு, அன்னியத் தொழில் நிறுவனங்கள், சிச்சுவானில் தொடர்ந்து செயல்பட்டு இடைவிடாமல் முதலீடு செய்து வருகின்றன.

உள்ளூரின் பல்வேறு நிலை அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அன்னிய தொழில் நிறுவனங்களுக்கு, நிலநடுக்கத்தின் பாதிப்பை தணிவித்தன. அன்னிய வணிகர்களின் முதலீட்டு நம்பிக்கையை வலுப்படுத்துவது, நிலநடுக்கத்துக்கு பிறகான மறுசீரமைப்பில் அவற்றின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

கடுமையான நிலநடுக்கத்துக்குப் பிறகு, அன்னிய தொழில் நிறுவனங்களுக்கான நிலநடுக்கத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணியையும், உற்பத்தியை மீட்கும் பணியையும் சிச்சுவான் மாநிலத்தின் வணிகத் துறை, உடனடியாக துவங்கியது. சிச்சுவான் மாநிலத்தின் வணிகத் துறையின் அதிகாரி shi zheng hua கூறியதாவது

2009ம் ஆண்டின் முதல் காலாண்டில், சிச்சுவான் மாநிலத்தில் முதலீட்டுத் தொகை ஒரு கோடி அமெரிக்க டாலரை தாண்டிய அன்னிய மூதலீட்டுத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை 15 ஆகும். 7 அன்னியத் தொழில் நிறுவனங்களும், அதன் முதலீ்ட்டுத் தொகையை அதிகரித்துள்ளன.

இவ்வாண்டின் மார்ச் திங்கள் இறுதியில், சிச்சுவானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 6 பிரதேசங்களில் அன்னியத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 4 ஆயிரத்து 323ஐ எட்டியுள்ளன. இது நிலநடுக்கத்துக்கு முன், அதே இருந்ததை விட 174 அதிகரித்துள்ளது. சிச்சுவானில் அன்னியத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தொகை, 4 ஆயிரத்து 300 கோடி அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.

சிச்சுவான் மாநிலத்தின் தொழில் மற்றும் வணிகத் துறையின் துணைத் தலைவர் huang jun கூறியதாவது

நிலநடுக்கத்துக்கு பிறகு, பொதுவாக, அன்னியத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, chen du நகரில் இது அதிகம். 2008ம் ஆண்டு மே திங்கள் முதல் 2009ம் ஆண்டு மார்ச் திங்கள் வரை, chen du நகரில், புதிதாக பதிவாகியுள்ள அன்னியத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 166ஐ எட்டியுள்ளது. நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிற பிரதேசங்களில் புதிய அன்னிய தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இப்பிரதேசங்களில் அந்நிய வணிகர்களின் முதலீட்டு உற்சாகம், தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.