• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-07 14:51:38    
துங் இனத்தின் விழாக்கள்-3வது பகுதி

cri

மகளிர் விழா

குய்சோ, ஹூனான், குவாங்சி ஆசிய பிரதேசங்களின் எல்லை பகுதிகளிலான சிறுபான்மை தேசிய இன மக்கள், சந்திர நாட்காட்டியின்படி 4வது திங்களின் 8ம் நாளில் மகளிர் விழாவைக் கொண்டாடுகின்றனர். இது, துங் இனத்திலிருந்து தோன்றி வளர்ந்த விழாவாகும். இந்நாளில், திருமணமான மகளிர், பெற்றோரின் வீட்டுக்குத் திரும்பி, குடும்பத்திலான பெண் உறவினர்களோடு கூடி விழாவைக் கொண்டாடுகின்றனர். கறுப்பான ciba என்ற அரிசியால் தயாரிக்கப்பட்ட உணவை சமைக்கின்றனர். கணவன் வீ்ட்டுக்கு திரும்பிய போது, அவற்றை கொண்டு சென்று உறவினருக்கு வழங்குகின்றனர்.

புதிய உணவை ருசிப்பது

சந்திர நாட்காட்டியின்படி, 6வது திங்களின் 6ம் நாள், புதிய அரிசியை ருசித்து சாப்பிடும் விழாவாகும். ஹூநான் மாநிலத்தின் துங் இன பிரதேசத்தில், நாய்கள் இவ்விழாவின் முக்கிய விருந்தினர்கள். நாய்கள் தான் புதிய சோற்றை சாப்பிட்ட பின்பு தான் மக்கள் சாப்பிட முடியும். செவிவழி கதைகளின்படி, பண்டைக்காலத்தில் வெள்ளப்பெருக்கினால் நெல் விதைகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன. நாயின் வாலில் சில விதைகள் ஒட்டியிருந்தன. மனிதர்கள், இந்த நெல் விதைகளால் கொண்டே வளர முடிந்தது. இந்த நாயின் பங்கை நினைவு கூரும் வகையில், புதிய அரிசியை அறுவடை செய்த பின், முதலில் சோறு அமைத்து நாய்களுக்கு வழங்குகின்றன.

இது, அனைத்து துங் இன பிரதேசத்திலும் கொண்டாடப்படுகிறன்ற விழாவாகும்.

பாடல் விழா

சந்திர நாட்காட்டியின்படி 7வது திங்களின் 20ம் நாள், குய் சோ மாநில jianhe மாவட்டத்தின் துங் இன மக்களின் பாடல் விழாவாகும். இது, இளைஞர்கள் காதலை வெளிப்படுத்துகின்ற நாளுமாகும்.

குளிர்காலத்தின் வருகை

குளிர்காலம் வந்த நாளில், துங் இன மக்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அது ஹன் இனத்தின் வசந்த விழாவைப் போல் அவர்களது மிக முக்கிய விழாவாகும். Lusheng என்ற இசை கருவி இசைத்தல், பாடல், நாடகம் முதலிய நடவடிக்கைகள் இடம்பெறும். குவாங் சி ச்சுவங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்னிங் நகரில், வீட்டுக்கு திரும்ப முடியாத துங் இன மக்கள் கூடி கொண்டாட்டம் செய்கின்றனர்.