• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-07 10:17:30    
உலக நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டி

cri
ரோம் நகரில் நடைபெற்ற 13வது உலக நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டி 2ம் நாள் முடிவடைந்தது. சீனப் பிரதிநிதிக் குழு 11 தங்கம், 7 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்கள் என்ற சாதனையை கொண்டு, பதக்கப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது. வரலாற்றில் 2வது மிகச் சிறந்த சாதனையை சீன வீரர்கள் உருவாக்கினர்.

கடைசி நாளைய போட்டியில், சீன வீரர் சன் யாங், ஆடவர் 1500 மீட்டர் சுதந்திரபாணி நீச்சல் போட்டியில் ஒரு வெண்கலப்பத்தகத்தை பெற்றார். இப்போட்டியின் நீச்சல் போட்டியில், சீன வீரர்கள், 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை எட்டியுள்ளனர். வரலாற்றில், சீன நீச்சல் வீரர்கள் எட்டிய 2வது மிகச் சிறந்த சாதனை, இதுவாகும். 1994ம் ஆண்டு உலக நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டியில், சீனப் பிரதிநிதிக் குழு 12 தங்கப்பதக்கங்களை எட்டியது.
நடப்பு நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டி, ஜுலை 17ம் நாள் துவங்கியது. நீச்சல், நீர் குதிப்பு, நீர் பந்து,மகளிர் ஒத்தியக்க நீச்சல் போட்டி முதலிய 5 போட்டிகளில் 75 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. நீர் குதிப்பு, நீச்சல், மகளிர் ஒத்தியக்க நீச்சல்

ஆகிய போட்டிகளில், சீன வீரர் மற்றும் வீராங்கனைகள் திறமையை வெளிக்காட்டினர். அமெரிக்கப் பிரதிநிதிக் குழு, 11 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை கொண்டு, பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றது. ரஷியப் பிரதிநிதிக் குழு 8 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை கொண்டு 3வது இடத்தை பிடித்தது.
31 நீச்சல் போட்டிகளில், 43 புதிய உலக சாதனைகள் உருவாக்கப்பட்டன. நடப்பு உலக நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டியின் சிறப்பு, இதுவாகும்.
14வது உலக நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டி 2011ம் ஆண்டு சீனாவின் ஷாங்காயில் நடைபெறும்.

2009ம் ஆண்டு இத்தாலி மேல்நிலை கோப்பை பெய்ஜிங் தேசிய விளையாட்டரங்கில் 8ம் நாள் நடைபெறும். 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் நாள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க, அமைப்புக் குழு, ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர்களுக்கு சிறப்பு மேடை ஒன்றை தயாரித்துள்ளது. 1984ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர்கள் மற்றும் தனது அலர்களது குடும்பத்தினர்கள் இந்த மேடையில் போட்டியை பார்வையிடுவர்.