• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-10 09:36:45    
2009 உலக மகளிர் வாலிபால் சாம்பியன்பட்டப்போட்டி

cri

பெய்ஜிங் நேரப்படி 3ம் நாள் விடியற்காலை, 2009ம் ஆண்டு உலக மகளிர் வாலிபால் சாம்பியன்பட்டப்போட்டி, பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரில் முடிவடைந்தது. நடப்பு போட்டியின் கடைசியான மிக முக்கிய போட்டியில், ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற பிரேசில் அணி, 3-0 என்ற ஆட்டக்கணக்கில் அமெரிக்க அணியை தோற்கடித்தது. 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது. நடப்புப் போட்டியின் 2வது இடத்தை ஜெர்மன் அணி பிடித்தது. அமெரிக்க மற்றும் போர்டோ ரிகோ அணிகள், முறையே 3வது 4வது இடங்களை படித்தன.

பெய்ஜிங் நேரப்படி 3ம் நாள், ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் ஹங்கேரி போட்டியின் தேர்வு சுற்றில் காயமுற்ற பெர்ராரி அணியின் வீரர் மாசா, தனது மனைவியுடன் தாய்நாடான பிரேசிலுக்கு திரும்பினார்.
2009 2010ம் ஆண்டுக்கான அமெரிக்க கூடைப்பந்து சம்மேளனம் கூடைப்பந்து தொடர்போட்டிக்கான நிகழ்ச்சி நிரலை அமெரிக்க கூடைப்பந்து சம்மேளனம் 4ம் நாள் வெளியிட்டது. இவ்வாண்டு அக்டோபர் 27ம் நாள் இப்போட்டி துவங்கும். முதல் போட்டியில் பாஸ்டன் செல்டிக்ஸ் மற்றும் க்ளீவ்லேண்ட் கேவலியர்ஸ் அணிகள் கலந்துகொள்ளும்.
30 அணிகள், மொத்தமாக 1230 போட்டிகளில் கலந்துகொள்ளும். அனைத்து அணிகளும் தலா 82 போட்டிகளில் மோதும். கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலுள்ள முதல் 8 அணிகள், இறுதிக்கட்டப்போட்டியில் கலந்துகொள்ளும்.

இத்திட்டப்படி, இறுதிப் போட்டி, 2010ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் நடைபெறும்.
3ம் நாளிரவில், சீனாவின் நடுப்பகுதியிலுள்ள வூ ஹான் நகரில் நடைபெற்ற 2009ம் ஆண்டு ஆசிய இளைஞர் மகளிர் கால்பந்து போட்டியில், சீன அணி, 2-1 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்ற பின், சீன அணி, B குழுவிலிருந்து அடுத்த கட்டப்போட்டியில் நுழைந்தது.
நடப்பு நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டி, ஜுலை 17ம் நாள் துவங்கியது. நீச்சல், நீர் குதிப்பு, நீர் பந்து,மகளிர் ஒத்தியக்க நீச்சல் போட்டி முதலிய 5 போட்டிகளில் 75 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. நீர் குதிப்பு, நீச்சல், மகளிர்

ஒத்தியக்க நீச்சல் ஆகிய போட்டிகளில், சீன வீரர் மற்றும் வீராங்கனைகள் திறமையை வெளிக்காட்டினர். அமெரிக்கப் பிரதிநிதிக் குழு, 11 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை கொண்டு, பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றது. ரஷியப் பிரதிநிதிக் குழு 8 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை கொண்டு 3வது இடத்தை பிடித்தது.
31 நீச்சல் போட்டிகளில், 43 புதிய உலக சாதனைகள் உருவாக்கப்பட்டன. நடப்பு உலக நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டியின் சிறப்பு, இதுவாகும்.
14வது உலக நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டி 2011ம் ஆண்டு சீனாவின் ஷாங்காயில் நடைபெறும்.