10ம் நாள், ஷாங்காய் மாநகரத்தின் சுற்றுலாப் பணியகம், சீன Union Pay நிறுவனத்துடன் இணைந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு, ஷாங்காய் சுற்றுலாவுக்கான வங்கி அட்டையை, வினியோகித்தது. இதன் விளைவாக, 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும் காலத்தில், பயணிகளின் தேவையை மேலும் சிறப்பாக நிறைவு செய்ய முடியும்.
ஷாங்காய் மாநகருக்குச் சென்று, பயணம் மேற்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், ஷாங்காய் உள்ளூர் குடிமக்கள் ஆகியோருக்கு, இத்தகைய அட்டைகள், வினியோகிக்கப்பட்டன. இவ்வட்டைகளைப் பயன்படுத்தி, பயணிகள், சீனா மற்றும் வெளிநாடுகளிலுள்ள சீன Union Pay அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் இணையத் தளத்தில், நுகர்வு செய்யலாம். தவிர, ஷாங்காய் மாநகரில், உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவற்றில் சிறப்பு சலுகையுடைய சேவையையும் அனுபவிக்கலாம் என்று அறியப்படுகிறது.
|