• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-11 10:11:17    
ஏமேய்ஷான் மலை (அ)

cri

ஏமேய்ஷான் மலை, 30 டிகிரி வட நில நோர்கோட்டிலும், 103 டிகிரி கிழக்கு நில நிரைக்கோட்டிலும் அமைந்துள்ளது. அது, சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் தென்மேற்கு எல்லைக்கு அருகில் இருக்கிறது. அதன் வடக்குப் பகுதியிலிருந்து, சிச்சுவான் மாநிலத்தின் தலைநகர் செங்தூ நகரம்

120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதன் கிழக்குப் பகுதியிலிருந்து, நீண்டகால வரலாறு வாய்ந்த புகழ்பெற்ற லேஷான் நகரம் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அதன் வடக்குப் பகுதியில், ச்சின்லிங் மற்றும் மின்ஷான் மலைகள் உள்ளன. வான்போதிங், சின்திங், ச்சியன்போதிங் ஆகிய மலைமுகடுகள் காணப்படுகின்றன. வான்போதிங், இங்குள்ள மிக உயரமான மலைமுகடாகும். கடல் மட்டத்திலிருந்து

 

3099 மீட்டர் உயரம் கொண்டதாகும். சின்திங், கடல் மட்டத்திலிருந்து 3077 மீட்டர் உயரத்திலும், ச்சியன்போதிங், கடல் மட்டத்திலிருந்து 3046 மீட்டர் உயரத்திலும் உள்ளன. ஏமேய்ஷான் மலையின் மொத்த பரப்பளவு, 623 சதுர கிலோமீட்டராகும்.
1996ம் ஆண்டு, அது, ஐ.நாவின் யுனெஸ்கோ நிறுவனத்தால், உலகின் பண்பாட்டு மற்றும் இயற்கை மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.