2009ம் ஆண்டு முதல், தியான் ஜின், லியாவ்னிங், ச்சேச்சியாங், ஃபூச்சியன், ஜியாங் சி, ஷான் தூங், ஹூநான், குவாங்துங் உல்ளிட்ட பொருளாதாரம் வளர்ச்சி கண்ட 11 மாநிலங்கள் மற்று மாநகரங்களிலான முக்கிய இடைநிலை தொழிற் பள்ளிகள், திபெத்திலிருந்து வந்த மாணவர்களுக்கு தொழிற் கல்வியை வழங்கத் துவங்கின. திபெத் பொருளாதார கட்டுமானத்துக்கு உடனடியாக தேவைப்படும் தொழிற் நுட்பத் திறமைசாலிகளை வளர்த்தல், திபெத்திலான தொழிற்துறை அமைப்பு முறையின் சரிப்படுத்தல், தனிச்சிறப்புத் தொழிற்துறையின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு இது வலிமை மிக்க ஆதரவு வழங்கும்.
மற்ற பிரதேசப் பள்ளிகளிலான திபெத் மாணவர்களுக்கு இலவச கல்வி அமைப்பு முறை நடைமுறையாக்கப்படுகிறது என்று சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேச கல்வித் துறையின் பொறுப்பாளர் ஒருவர் அறிவித்தார்.
|