• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-13 11:13:12    
குறுந்தகவல்களை குறைக்க

cri
குறுந்தகவல்களை குறைக்க

வங்கியில் கணக்கு தொடங்க, ஏதாவது ஒரு காப்பீட்டில் சேர, பலவகை விளம்பரங்கள் என குறுந்தகவல்கள் செல்லிடபேசி வாடிக்கையாளர்களுக்கு குவிந்து வருகின்றன. தங்களுடைய செல்லிடபேசி எண்கள் எவ்வாறு இவர்களுக்க கிடைக்கிறது என்பதே பலருக்கு புரியவில்லை. சிலவேளைகளில் அவை போலி தகவல்களை தருபவையாகவும் இருக்கக்கூடும். இவ்வாறு தேவையற்ற, ஏமாற்றுகின்ற செல்லிடபேசி குறுந்தகவல்களை பெறாமல் இருக்க, தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான சீன செல்லிடபேசி நிறுவனம் மென்பொருள் ஒன்றை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த குறுந்தகவல் மேலாண்மை மென்பொருளை www.bj.chinamobile.com மற்றும் wap.monternet.com என்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செல்லிடபேசி மூலம் அனுப்பப்படும் குறுந்தகவல், தொலைத்தொடர்வு வழிமுறைகளில் முக்கியமான ஒன்று. ஆனால், தேவையற்ற, ஏமாற்றுகின்ற குறுந்தகவல்கள் அனுப்பப்படுவது 64 கோடியே 90 இலட்சம் சீன செல்லிடபேசி வாடிக்கையாளர்களுக்கு தலைவலியாகி போவதை குறைக்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து

ஊக்கம் மருந்து தயாரிக்கக்கூடிய Cordyceps spbalifera என்ற காளான் வகை மூலிகையை இந்திய அறிவியலாளரும், Garhwal பல்கலைக்கழக பேராசிரியருமான S.P.S.Visth என்பவர் கண்டுபிடித்துள்ளார். வட இந்தியாவின் உத்திராகாண்டு மாநிலத்தின் மலைப்பகுதியில் இந்த மூலிகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்தி மொழி நாளேடான Nai Duniya செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மூலிகை இதுவரை ஐரோப்பா, கனடா, சீன ஆகிய நாடுகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி செய்யப்படும் ஊக்கமருந்தை விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கலாமா என்ற சோதனையில் வெற்றிபெற்றுள்ளதோடு, விளையாட்டு வீரர்களின் ஆற்றலை அதிகரிப்பதற்கு மிகவும் பாதுகாப்பானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புரோத சத்து அதிகமாக இருப்பதால் இந்த மூலிகை மருந்து இதர மருத்துகளை விட மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு காசநோய் மற்றும் புற்றுநோயாளிகளையும் குணப்படுத்தும் பண்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரம் தொட்ட முதியவர்

சுங்மோலாங்மோ சிகரத்தை மிகவும் முதிய வயதில் அடைந்தவர் என்று ஜப்பானை சேர்ந்த Yuichiro Miura உலக கின்னஸ் புத்தகத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளார். ஆனால் நேபாளத்தை சேர்ந்த Min Bahadur Sherchan இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் தனது 76 வது வயதில் 2008 ஆம் ஆண்டு மே திங்கள் 25 நாள் சுங்மோலாங்மோ சிகரத்தை அடைந்து சாதனைப்படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. Sherchan தனது சாதனையை நேபாள அரசு மூலம் உலக கின்னஸ் புத்தக பதிவுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனாலும் 2008 ஆண்டு மே 26 ஆம் நாள் தனது 75 வது வயதில் சிகரத்தை அடைந்த ஜப்பானின் Yuichiro Miura மிகவும் முதிர்ந்த வயதில் சிகரத்தின் உச்சியை அடைந்த நபராக பதிவுபெற்றுள்ளார். 76 வது வயதில் இச்சாதனையை செய்த தன்னை ஏற்றுக்கொள்ளாமல் 75 வது வயதில் சாதனைபுரிந்த ஜப்பானிய நபரை ஏற்றுக்கொண்டதற்கான விளக்கங்களைபெறவே Sherchan முறையிட இருக்கிறார். நேபளத்தின் சுற்றுலாத் துறையும் உள்துறை மற்றும் வெளிதுறை அமைச்சகங்கள் Sherchan னின் ஆவணங்களை அனுப்பிவிட்டதாகவும், அவற்றை உலக கின்னஸ் பதிவு அலுவலகம் பெற்றுகொண்டதற்கான பதிலை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. குடும்பத்தினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த சிகரத்தை அடையும் முயற்சியில் இறக்கவும் தயார் என்ற உறுதியோடு முயன்ற Sherchan சாதனை படைத்தார். அதனை தனது நாட்டையும் முதியோரையும் பெருமைப்படுத்தவே செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.