அவர்களில் சிறுநாயகன்பட்டி கே வேலுசாமி, மதுரை 20 ஆர் அமுதராணி, எஸ்.கே.பாப்பம்பாளையம் பி.தி.ஷுரேஸ்குமார் முதலியோர் இடம் பெறுகின்றனர். அவர்களின் வினாகளுக்கு இன்றைய நிகழ்ச்சி மூலம் விடையளிக்கின்றோம். தொகுத்து வழங்குபவர் தி. கலையரசி.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 2010ம் ஆண்டு மே திங்களில் துவங்கி கிட்டத்தட்ட 6 திங்கள் நீடிக்கும். அதன் நிலபரப்பு 5.28 சதுர கிலோமீட்டராகும். இதற்கிடையில் 20 ஆயிரம் முதல் 30ஆயிரம் வரையான முறைகளில் பல்வகை கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். உலக பொருட்காட்சியின் முக்கிய தலைப்பு அதாவது "புரிந்துணர்வு, தொடர்பு, ஒன்று குவித்தல், ஒத்துழைப்பு"என்ற எண்ணம் இந்த நடவடிக்கைகளின் மூலம் முழுமையாக வெளிகாட்டப்படும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் வரலாற்றில் முன்கண்டிராத அளவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகளவில் சுமார் ஆயிரம் தலைசிறந்த கலை நிகழ்ச்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைப்பின் பேரில் அரங்கேற்ற நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும். சீனாவின் பல்வேறு மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்கள் இந்த கலை அரங்கேற்ற நடவடிக்கைகளில் முக்கிய சக்தியாக பங்கெடுக்கும். இதுவரை சீனாவின் பல்வேறு மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்கள் விண்ணப்பித்துப் பதிவு செய்த கலை நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை 120க்கு மேலாகும். ஒவ்வொரு மாநிலமும் அல்லது மாநககரம் மற்றும் பிரதேசத்துக்கு "5 நாட்கள் நடவடிக்கை வாரம்"என்ற திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றது. ஆயத்தப் பணி பற்றி ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகாரம் ஒருங்கிணைப்பு ஆணையகத்தின் துணை தலைவர் ஹுச்சின்ச்சுன் கருத்து தெரிவித்தார். நாடு முழுவதும் பங்கெடுப்பதினால் உலக பொருட்காட்சியின் பண்பாட்டு அரங்கேற்ற நடவடிக்கை தனிச்சிறப்பு மிக்க மதிப்பு கொண்டுள்ளது. அடிமட்டகளிலிருந்து வரும் நாட்டுப்புற அரங்கேற்றுவோர் தம் தாத்தா, தந்தை ஆகியோரின் நினைவு மற்றும் மனதின் ஆழத்திலிருந்து இருக்கின்ற தேசிய இன பண்பாட்டுப் பாரம்பரியத்தை வெளிக்கொணர்வர். ஒரு நிகழ்ச்சி, ஓர் அரங்கேற்றம் ஆகியவற்றில் உணர்ச்சியூட்டும் மிதமான அருமையான கதைகள் இடம் பெறுகின்றன என்று கூறலாம். உலகப் பொருட்காட்சி என்ற பெரிய மேடை மூலம் சீனாவின் பாரம்பரிய நாட்டுப்புற பண்பாடு உலகின் மக்கள் அனைவருக்கும் வெளிகாட்டப்படும். இந்த கலை நிகழ்ச்சிகள் பண்பாட்டு கலை மட்டுமல்ல வாழ்க்கையில் உண்மையான எடுத்துக்காட்டுகளும் ஆகும். இந்த கலை நிகவ்ச்சிகளின் அரங்கேற்றங்களை கண்டு ரசிபப்தன் மூலம் சீன மக்களின் இணக்கமான வாழ்க்கை உண்மையை உணர்ந்து கொள்வர். இது ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடத்துவதன் நோக்கங்களில் ஒன்றாகும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு ஆணையகத்தின் துணை தலைவர் ஹுச்சின்ச்சுன் விவரித்தார்.
நேயர்கள் இதுவரை இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் கலைநிகழ்ச்சி பற்றி விவரித்த தகவல்களை கேட்டீர்கள். அடுத்த வாரத்தில் இடம் பெறும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை நினைவு செய்வதற்கான ஆயத்த பணி பற்றி தொடர்ந்து விவரிப்போம். கேட்க தவறாதீர்கள். அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். வணக்கம் நேயர்களே.
|