• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-13 09:41:57    
அழாகன சியென் தெள ஹு

cri

சியென் தெள ஹு என்னும் ஏரி, சீனாவின் சேசியாங் மாநிலத்தில் அமைந்துள்ளது. சியென் தெள ஹு காட்சி மண்டலத்தில் இயற்கைக் காட்சிகள், மிகவும் அழகானவை, உயிரினச் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கிறது. ஆற்றில் தெப்பம் விடும் விளையாட்டைத் தவிர, சியென் தெள ஹுவில், நீர் பொழுதுபோக்கு இடம் உள்ளது. இங்கு, மோட்டார் படகு ஓடுதல், இயந்திர விசைப்படகு பயணம், நீர் மிதிவண்டி, நீர் வான் குடை மிதவை முதலிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ஏராளமான பயணியர்களை ஈர்க்கின்றன.

ஷாங்காய் மாநகரிலிருந்து வந்த பயணி யான் லீனா அம்மையார் கூறியதாவது:
அகலமான இந்த இடத்தைப் பார்த்தால் மனநிலை ஒளிமயமாக மாறுவது உறுதி. மிகப் பெரிய பரப்பளவு கொண்ட ஏரி மற்றும் அதிகமான தீவுகளைப் பார்த்து ரசிப்பதில், மிகவும் மிகழ்ச்சியடைந்தேன். வேறு இடங்களில் இத்தகைய தனிச்சிறப்பியல்பு மிகுந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்ததில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

60 வயதான பயணி Shen xin அம்மையார், ஏராளமான நிழற்படங்களை எடுத்து, சியென் தெள ஹு ஏரியின் அழகான இயற்கை காட்சிகளைப் பதிவு செய்தார்.
முதல் தர உயிரினச் சுற்றுச்சூழல் மற்றும் எழில் மிக்க இயற்கை மூலவளங்களைக் கொண்டதால், சியென் தெள ஹு ஏரியின் புகழ் விரைவாக பரவி, அதன் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சியென் தெள ஹு இயற்கைக் காட்சி மண்டலத்தின் சுற்றுலா அலுவலகத்தின் தலைவர் பாஃயாங் கூறியதாவது:

தற்போது, ஆண்டுதோறும் சுமார் 30 இலட்சம் உள்நாட்டுப் பயணிகளும், மென்மேலும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளும் சுற்றுலா பயணம் மேற்கொள்ள இங்கு வந்து தங்குகின்றனர். 2008ம் ஆண்டில், சியென் தெள ஹுவின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம், 307 கோடி யுவானை எட்டியது. உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஓய்வுத் தலமாக இதை மாற்ற பாடுபடுகின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.
நேயர்களே, இன்றைய நிகழ்ச்சியைக் கேட்டப் பிறகு, சியென் தெள ஹு ஏரிக்கு வந்து அங்குள்ள அழகான இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்க விரும்புகின்றீர்களா?வாய்ப்பு கிடைத்தால் தவறு வாதீர்கள்.