• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-14 10:51:07    
அழகான மற்றும் வேடிக்கையான பொருட்களை விரும்பும் Peng Wei

cri
"சிறப்பு ஓவிய தொகுப்பை விட நவ நாகரீக இதழ்களைப் பார்க்க விரும்புகின்றேன்" என்று Peng Wei புன்சிரிப்புடன் கூறினார். "நாங்கள் வாழும் காலம் நவ நாகரீகத் துறையினால் சூழப்பட்டுள்ளது. இதுதான் நான் உணர்ந்து வாழும் சூழ்நிலை. எனவே படைப்புகளின் மூலம் அதனை வெளிப்படுத்துவேன்" என்று அவர் மேலும் கூறினார். சுவரில் அவர் தயாரித்த அலங்காரப் பொருட்கள் மாட்டப்பட்டுள்ளன. நெகிழியால் செய்யப்பட்ட பொன்மையின் மேல் சீனத் தாளை ஒட்டி, காய்ந்த பின் அதை உரித்து தயாரித்த பெண் உடல் மாதிரி அதுவாகும். பாரம்பரிய சீன ஓவியத்தின் பகுதிகளிலிருந்து தெரிவெடுத்த மனிதர், புழு பூச்சி, மலர் மற்றும் புல், மலை மற்றும் ஆறு உள்ளிட்ட பல்வகை அமைவுகள் இம்மாதிரியின் மேற்பரப்பில் கவனமாக வரையப்பட்டுள்ளன. கூர்மையான ஓரமும் முனையும் இல்லாமல் காணப்படுகிறது.

Peng Weiயின் படைப்புகள் மிகப் புதுமையான சோதனை முறையில் மை மற்றும் தூரிகையால் உருவாக்கப்பட்ட ஒரு வகை ஓவியத்தின் வெளிப்பாடு என பல விமர்சனங்கள் கூறின. ஆனால் இவையனைத்தும் பக்குவமடைந்த நிலையில் காணப்பட்ட விளைவு என Peng Wei குறிப்பிட்டார். அவர் கூறியதாவது—
"அயல் வீட்டுக்காரர் தையற்காரராவார். 2 நெகிழி பென்மைகளை அவர் தூக்கியெறிந்தார். நான் அவற்றை எடுத்து, பின் திடீரென ஏற்பட்ட ஓர் எண்ணத்தில் இவ்வாறு பயன்படுத்தினேன். சிந்தனையின் பொருளை முன்கூட்டியே தீர்மானிக்கவில்லை. அவற்றின் மூலம் நடைமுறை வாழ்க்கையை வெளிப்படுத்தவும் எண்ணவில்லை. அழகு, வேடிக்கையானது என உணர்ந்தேன்" என்றார் அவர்.

தனது தந்தை பாரம்பரிய சீன ஓவியக் கலைஞராக இருப்பதால் குழந்தை பருவத்திலிருந்து Peng Wei ஓவியம் பற்றி கற்றுக் கொண்டு வந்தார். பின்னர் Nan Kai பல்கலைக்கழகத்தின் பாரம்பரிய சீன ஓவியத் துறையில் கல்வி பயின்று உறுதியான அடிப்படையை உருவாக்கினார். பழைய ஓவியத்தை பார்த்து வரைவதை அவர் மிகவும் விரும்புகிறார். அவரது கலைப் படைப்பு போக்கில் பெரும்பாலும் எந்த நோக்கமும் இருப்பதில்லை. Peng Weiயின் ஓவியங்கள் பற்றி கலைஞர் Chen Danqing குறிப்பிடுகையில், 1970ஆம் ஆண்டுகளில் பிறந்த Peng Wei, பாரம்பரிய சீன ஓவியத் துறையில் புதிய தலைமுறையினர் என்ற போதிலும் அவரது ஓவியப் பாணி பாரம்பரிய வகையாக இருக்கிறது. அவரது பாரம்பரிய பாணியே தனது கவனத்தை ஈர்க்கிறது என்று கூறினார். Peng Wei தற்போதைய பாரம்பரிய சீன ஓவியத் துறையிலான புதியவர்களைப் பிரதிபலிக்கிறார். அவர்கள் குறிப்பிட்ட நோக்கத்துடன் புத்தாக்கம் செய்யாமல், சுதந்திரமாக ஓவியம் வரைந்து, விளையாடும் மனநிலையில் பழைய தலைமுறை ஓவிய கலைஞர்களை விட மேலும் தூரமாக செல்கின்றனர் என்றும் Chen Danqing கருத்து தெரிவித்தார்.

தற்போது கலைஞர்கள் நவ நாகரீக சின்னங்களுடன் ஒத்துழைக்கும் ஓட்டம் தீவிரமாகி வருகிறது. 798 கலை ஆலை, இன்று நுண்கலை காட்சியம், சீன நுண்கலைக் காட்சியகம் ஆகியவை, DIOR, HERMES, MAX MARA ஆகிய வர்த்தகச் சின்னங்களுடன் ஒத்துழைத்து, மிகவும் அழகான பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தன. பல கலைஞர்கள் இதனால் புத்துணர்வும் அறிவும் பெற்றனர். Peng Weiயின் மனதில் ஓர் எண்ணம் இருக்கிறது. "என் கண்ணோட்டத்தில், அந்த அழகான ஆடை வரைவு சில கலைப் படைப்புகளை விட மேலும் சிறப்பாக அமைந்து, மேலும் பெரும் நடைமுறை பயன்பாட்டு மதிப்பு கொள்கிறது" என்று அவர் கூறினார்.