தற்போது சீனாவில் கடல் மீட்புதவி அணி வான், கடல் மற்றும் கடலடியிலான மீட்புதவிகளை வழங்கும் திறனை கொண்டுள்ளது. இதன் மூலம் முழுமையான திறன் கொண்ட கடல் மற்றும் வான் பன்னோக்க மீட்புதவி அமைப்பு முறை உருவாயிற்று.
கடந்த 30 ஆண்டுகளில் சீன அரசு இதற்காக நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. ஏற்கனவேயுள்ள பழைய கப்பல்களுக்கான தொழில் நுட்பச் சீரமைப்பு விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கப்பலின் செயல்பாட்டுத் திறன் உயர்ந்துள்ளது.
தொடக்க புள்ளிவிபரங்களின் படி சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக்கு பின்பான கடந்த 30 ஆண்டுகளில் கடல் மீட்புதவி மூலம் 44 ஆயிரத்து 100 பேர் காப்பாற்றப்பட்டனர். 24 ஆயிரத்து 700 கப்பல்கள் காப்பாற்றப்பட்டன.
|