நகர உயிரின சுற்றுச்சூழல் பற்றிய சர்வதேச கலந்துரையாடல் 14ம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. இந்தத் திட்டப்பணியை, 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியுடன் இணைந்து நடத்த, ஐ.நாவும் யுனேஸ்கோவும் விரும்புகின்றன.
யுனேஸ்கோ, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை ஒரு வாய்ப்பாக கொண்டு, புத்தாக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்துக்களை பரப்பும் என்று ஐ.நாவிலுள்ள யுனேஸ்கோவின் முதன்மை பிரதிநிதி Helene Marie Gossilin அம்மையார் அறிமுகப்படுத்தினார். சீனா உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளுடனும் கூட்டாக முயற்சி செய்து, தொடரவல்ல வளர்ச்சி இலக்கை அடைய, ஐ.நாவும் யுனேஸ்கோவும் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
|