உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைந்த நவீனமயமாக்க சரக்குப் புழக்க மையமான சிங்காய்-திபெத் இருப்புப் பாதையின் Nagqu சரக்குப் புழக்க மையம், 17ம் நாள் அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கியது.
இந்தச் சரக்குப் புழக்க மையம், திபெத்திலுள்ள Nagqu தொடர் வண்டி நிலையத்திற்கு அருகில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில் அமைந்த இதன் பரப்பளவு, சுமார் 530 ஹெக்டராகும். இது, சீன இருப்புப் பாதை அமைச்சகத்தின் முதலீட்டில், 2007ம் ஆண்டு செப்டம்பர் 28ம் நாள் கட்டியமைக்கப்படத் துவங்கியது. லாசா, ஷிகாசெ முதலிய பிரதேசங்களுக்கு இது சேவை வழங்கும். இது, சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள மிகப் பெரிய சரக்குப் புழக்க மையமாகும் என்று அறியப்படுகிறது.
|