நவ சீனா நிறுவப்பட்டதன் வைர விழாவைக் கொண்டாடும் வகையில் பெய்ஜிங் அருங்காட்சியகம் ஆகஸ்ட் 18ம் நாள் முதல் 4 கண்காட்சிகளை பரப்புரை செய்யும். சீனத் தேசத்தின் பழமை மிக்க நாகரிக வரலாறு முதல் நவ சீனா நிறுவப்பட்டது வரையான காலக்கட்டத்தின் வெகுவான வளர்ச்சி நவீன வாழ்க்கையின் மாற்றப் போக்கு ஆகியவை இந்த கண்காட்சிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
அதேவேளையில் 260க்கும் அதிகமான தொல் பொருட்கள், 7000 ஆண்டுகால வரலாறு கொண்ட இசைக் கருவிகள், 7ம் நூற்றாண்டிலான தாங் வம்சகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வகை பீங்கான் பொருட்கள், சின்ச்சியாங்கில் காணப்பட்ட மம்மிகள் ஆகியவை கண்காட்சிக்கு வைக்கப்படும்.
நவீன வாழ்க்கைப் பகுதியில் பண்டைக்கால நகரச் சுவடுகள், இளம் மாணவர்களின் நிழற்படங்கள், திருமணத்திற்காக கையால் தயாரிக்கப்பட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், மின்னாற்றல் இரு சக்கர வாகனங்கள், கணினிகள் போன்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
|