உலகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப் போக்கில், ஷாங்காய் மேற்கொண்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி, உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடுவோருக்கு நன்மை பயப்பது மட்டுமல்ல, சுமார் 2 கோடி ஷாங்காய் மாநகரவாசிகளுக்கும் பசுமைச் செல்வத்தை வழங்கும். ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகம் 18ம் நாள் தனது அறிக்கையில் இதை சுட்டிக்காட்டியது.
காற்றுத் தரம், போக்குவரத்து, எரியாற்றல், பசுமைமயமாக்கம் உள்ளிட்ட 9 துறைகளில், ஷாங்காய் மேற்கொண்டுள்ள முயற்சிகளை, இவ்வறிக்கை விளக்கிக் கூறியது.
ஷாங்காய் மேற்கொண்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியை இவ்வறிக்கை பாராட்டியது. அதே வேளையில், மேலும் மேம்படுத்தும் முன்மொழிவுகளையும் முன்வைத்தது.
|