• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-18 11:06:22    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: வணக்கம். சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை பற்றிய உங்கள் கருத்துக்களின் தொகுப்பான நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு வரவேற்கிறோம். நிகழ்ச்சியின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
க்ளீட்டஸ்: கடிதங்கள், மின்னஞ்சல்கள் வாயிலாக தங்களது கருத்துக்களை எழுதியனுப்பிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
கலை: தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேளுங்கள். கேட்பதோடு நில்லாமல் ஒரு சில வரிகளில் நிகழ்ச்சிகளை பற்றிய உங்கள் கருத்துக்களையும் எழுதியனுப்புங்கள்.
க்ளீட்டஸ்: சரி, இனி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோம்.
கடிதப்பகுதி:
கலை: சென்னை தி. நகர் என், ராஜேந்திரன் நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். உத்திரக்குடி நேயர் சு. கலைவாணன் ராதிகா அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சியை கேட்டேன். சீன வானொலி தமிழ்ப்பிரிவு நிகழ்ச்சிகளை கேட்கத் தொடங்கியது, நேயர் மன்றம் ஆரம்பித்த அனுபவம், சீன வானொலி நிகழ்ச்சிகள் மூலம் பெற்ற தகவல்களை பணியில் பயன்படுத்துவது என பல அனுபவத் தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவருக்கு பாராட்டுக்கள்.


க்ளீட்டஸ்: அன்றாட சீன மொழி நிகழ்ச்சி குறித்து திருப்பூர் ரெய்கி. செ. வேதமூர்த்தி எழுதிய கடிதம். சீன மொழி வாக்கியங்களை கற்றுக்கொள்வோம் என்று கூறி சீன வானொலி அறிவிப்பாளர் கலையரசி அவர்கள் உரையாடினார். வாக்கியங்களை நன்றாக தனித்தனியா சொற்களை பிரித்து வாசித்து, பொருள் கூறியது மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது. அவ்வளவு எளிதல்ல என்றாலும் சீன மொழியை நிச்சயம் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பெடுத்து வருகிறேன்.
கலை: சீனப் பண்பாடு நிகழ்ச்சி குறித்து சேந்தமங்கலம் எஸ். எம். ரவிச்சந்திரன் எழுதிய கடிதம். சீனாவில் பல நகரங்கள் இருந்தாலும், பெய்ஜிங் மாநகரைச் சுற்றி பல காட்சித்தலங்கள் இருப்பதால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்று அறிந்தோம். தியெனான்மன் சதுக்கம், சொர்க்கக்கோயில் தடை செய்யப்பட்ட நகரம் ஒருபுறம் ஒலிபிக் விளையாட்டுப் போட்டிக்கான பறவைக்கூடு, நீர்கனசதுரம் உள்ளிட்ட நவீன கட்டிடங்கள் மறுபுறம் என சிறப்பான பெய்ஜிங் மாநகரை பற்றிய தகவல்கள் கேட்டோம். நன்றி.


க்ளீட்டஸ்: அடுத்து திருநெல்வேலி கடையாலுருட்டி எம். பிச்சைமணி எழுதிய கடிதம். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் திபெத் தொடர்பான ஊத்தங்கரை கவி செங்குட்டுவனின் கேள்விகளுக்கு கலையரசி அவர்கள் நன்றாக விளக்கம் அளித்தார். திபெத்தில் கோயில்கள், கோபுரங்கள் அதிகமாக உள்ளன என்பதையும், திபெத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் அறிந்துகொள்ள முடிந்தது. 1300 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது லாசா நகரம் என்பதையும் தெரிந்துகொண்டேன்.
கலை: இலங்கை காத்தான்குடி எம். ஒய். எம். மிஸ்பாக் எழுதிய கடிதம்.
சீன வானொலியில் இடம்பெறும் அறிவியல், கல்வி மற்றும் நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியை நான் விரும்பிக் கேட்பேன். செய்திகளின் மூல சீனாவில் நிகழும் பலவற்றை அறிந்துகொள்ளமுடிகிறது. சீனா இன்னும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும்.
க்ளீட்டஸ்: அடுத்து நெய்வேலி லோ. பசுபதி எழுதிய கடிதம். புதிய நேயராக சீன வானொலியை கேட்டு வரும் திரு, பசுபதி, சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை இப்போது நாள்தோறும் கேட்டு வருகிறார். அண்மையில் வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அகில இந்திய வானொலியிலும், சீன வானொலியிலும் பணியாற்றிய திரு. ராஜாராம் சீன வானொலியின் நேயர் மன்றக் கருத்தரங்கில் நிகழ்த்திய உரையை கேட்டு மகிழ்ந்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


கலையரசி: மறைமலை நகர், சி. மல்லிகாதேவி எழுதிய கடிதம். மக்கள் சீனம் நிகழ்ச்சியை கேட்டேன். அதில் சீனாவின் வங்கித்துறை பற்றி அறிய முடிந்தது. சீனாவில் புதிய ஆண்டில் பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதையும் அன்றைய நிகழ்ச்சி எடுத்துக்கூறியது. நிகழ்ச்சிய வழங்கிய சரஸ்வதிக்கு பாராட்டுக்கள்.
க்ளீட்டஸ்: இலங்கை கினிகத்தேனை எஸ். வி. துரைராஜா எழுதிய கடிதம். சீன வானொலியில் "இன்றைய திபெத்" என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க திபெத் பற்றிய பல தகவல்களை தருவது பாராட்டுக்குரியது. திபெத் மக்களின் முந்தைய வாழ்க்கை, தற்போதைய நிலை, இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், வளர்ச்சிகள் என பல தகவல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுவது சிறப்பு. இந்நிகழ்ச்சியினை தொகுத்து ஒரு மலராக, நூலாக வெளியிடலாம்.
மின்னஞ்சல் பகுதி
......நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங்.....
சீனா 1994- ஆம் ஆண்டு வெறும் 12 பதக்கங்களை மட்டுமே உலக நீச்சல் போட்டியில் பெற்றது.ஆனால் தற்போது ரோம் நகரில் நடந்த
உலக 13-வது நீச்சல் போட்டியில் 29 பதக்கங்களை பெற்று, உலக சாதனை படைத்து மேற்கத்திய நாடுகளை விட முன்னிலை வகித்தது பாராட்டத்தக்கதாகும்.


。。。。。。வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்。。。。。。
ஜுன் திங்கள் 18 ஆம் நாள் இடம்பெற்ற உங்கள் குரல் நிகழ்ச்சியைக் கேட்டேன். இன்றைய நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பசுபதி வெங்கடேஸ்வரன் என்ற நேயர் தயார் செய்த நிகழ்ச்சி இடம்பெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் பஞ்ச காவியம் என்ற இயற்கை வேளாண் மூலிகை மருந்தை தயார் செய்த கிராமவாசி ஜெயமூர்த்தி என்பவரின் நேர்காணல் இடம்பெற்றது. பஞ்ச காவியம் பற்றிய தகவல்கள் எனக்கு பிடித்திருந்தன. அதற்கான காரணங்கள் இரண்டு... ஒன்று, நான் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தவன். எனது முன்னோர்கள் யாவரும் வேளாண் தொழிலில் ஈடுபட்டவர்கள். செயற்கை பூச்சிக் கொல்லிகளினால் ஏற்படும் பல்வேறு கேடுகளை நான் அறிந்திருக்கின்றேன். ஆனால், பஞ்ச காவியம் என்ற பூச்சிக் கொல்லியினால் எவ்விதப் பிரச்னையும் இல்லை. இரண்டு.. உங்கள் குரல் நிகழ்ச்சியில் மீண்டும் மீண்டும் கேட்ட குரல்கள். மீண்டும் மீண்டும் பழைய கருத்துக்கள். அந்நிலையில், இன்றைய பேட்டி நிகழ்ச்சி சற்றே மாறுதலாய் எனக்குத் தோன்றியது. மிக்க நன்றி.


தென்பொன்முடி, தெ. நா. மணிகண்டன்
ஜூலை 23ம் நாளன்று அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் தூக்கத்தின் மகத்துவம் பற்றி கூறக் கேட்டேன். அரசன் முதல் ஆண்டி வரை தூக்கம் என்பது பொதுவான அம்சமாக அமைந்துள்ளது. அப்படிபட்ட தூக்கம் ஆழ்மன அமைதியுடன் இருக்கவேண்டும். அதுவும் சுமார் 8மணி நேர தூக்கம் மிகவும் அவசியமானது. இன்றைய இளைஞர்கள் வீண் பொழுது போக்கில் நேரம் கடத்தி உடலைவருத்தி கெள்வதுடன் நோய்தொற்றையும் பெருகின்றனர் இது ஆய்வுரீதியான உண்மை என்று தூக்கத்தின் மகிமை பற்றி விரிவான விளக்கம் தந்து விழிப்படைய செய்த சீனவானொலிக்கு நன்றி.
நாகர்கோயில், ஸ்டாலின்
ஷாங்காயில் சீன அரசு நீர், மண் முதலியவற்றுடன் தொடர்பான சுற்றுச் சூழல் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளது. 2010 -இம் ஆண்டு உலக பொருட்காட்சியை ஷாங்காயில் சிறப்பாக நடத்தும் பணிகளை மேற்கொள்ளத் துவங்கி இருப்பது பாராட்டத்தக்கதாகும். இந்த செயல் உலகிற்கு முன் மாதிரியாகவும் இருக்கிறது.
திமிரி. புலவர்.வீர ராமதாஸ்
ஜூலை 29ம் நாளன்றைய செய்திகள் கேட்டேன். சீனத்துணை தலைமை அமைச்சர் வாஷிங்டனில் கூறிய கருத்துக்கள் ஆக்கபூர்வமானவை. பொருளாதார மற்றும் நாணய ஒத்துழைப்பை ஆழமாக்குவது பற்றிய 4 முன்மொழிவுகளை அவர் முன்வைத்தார். பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைக்கான திசை மற்றும் ஆற்றலை சரியாக கற்றுத்தேர்ந்து, கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேம்படுத்தி, பொருளாதாரத்தின் சீரான நிதானமான வளர்ச்சியை முன்னேற்றுவது முதலியவை இதில் அடங்குகின்றன. அமெரிக்க சீன சந்திப்பு பயனுள்ள வகையில் அமைய வாழ்த்துக்கள்.


......மதுரை-20 என்.ராமசாமி......
இரண்டுநாட்கள் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு எகிப்தில் நிறைவடைந்தது. இம்மாநாட்டில் உலக ஒற்றுமை அமைதி வளர்ச்சிக்கான திசை, எதிர்கால வாய்ப்பு, மத்திய கிழக்குப் பிரச்சனை, சர்வதேச நிதிநெருக்கடி ஆகிஅயவை பற்றி விவாதிக்கப்பட்டது.
தலைவர்களுடைய அறிக்கையில் இன்பமான பாதுகாப்பான நியாயமான உலகத்தை தேடும் அணிசேரா நாடுகளின் அனைத்து மக்களது விருப்பத்தையும் இது வெளிப்படுத்தியது.
.........ஊட்டி; எஸ்.கே.சுரேந்திரன்.....................
ஜீலைத் திங்கள் 16ஆம் நாள் அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் சூரிய எரியாற்றலால் இயங்கக் கூடிய உலகின் முதல் விமானத்தை சீன ஆராய்ந்து தயாரித்துள்ளதை அறிந்தேன்.
இவ்விமானம் 2011ஆம் ஆண்டு உலகின் எல்லாக் கண்டங்களையும் சுற்றி வரும் என்ற கூடுதல் தகவல் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் மாசு பாடுகளைத் தவிர்த்து சூரிய ஆற்றலால் இயங்கும் இவ் விமானம் தூய்மையான எரியாற்றல் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் சீனாவின் முயற்சிகளைத் தெளிவு படுத்தும் விதமாக அமைந்துள்ளது, நன்றி