• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-18 11:08:55    
ஏமேய்ஷான் மலை (ஆ)

cri

பண்டைக்காலத்தில் சீன மொழியில், ஏமேய் என்றால் அழகான பெண் என்று பொருளாகும். ஏமெய்ஷானின் இரண்டு மலைகள் அருகருகே நிற்பது, எழில் மிக்க பெண்ணின் புருவத்தைப் போன்று காட்சியளிக்கும். அதனால், ஏமேய் என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏமேய்ஷான் மலை, மித வெப்ப மண்டலத்தில் உள்ளது. மலையின் வேறுபட்ட உயரத்தில், வேறுபட்ட தட்பவெப்பத்தை உணரலாம். மலையில், நான்கு பருவகாலங்கள் காணப்படலாம் என்று ஒரு பழமொழியும் இருக்கிறது. அதன் மலை உச்சிக்கும் மலையின் அடிவாசத்துக்கும் இடையில்,

தட்பவெப்ப வேறுபாடு, 14 டிகிரியாகும். கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டருக்கு மேலான பகுதியில், ஆண்டுதோறும் மூன்று திங்கள் காலம், பனியால் மூடப்பட்டு இருக்கும். அங்கு, குளிர்காலம் மற்றும் வசந்தகாலத்தை மட்டுமே அனுபவிக்க முடியும்.
இம்மலையின் இயற்கை மூலவளம், மிகவும் செழுமையாக இருக்கிறது. இங்குள்ள தாவரங்கள், 5000த்துக்கு மேற்பட்ட தாவர இனங்கள் வளர்கின்றன. அது, தாவரங்களின் அரசு எனவும் அழைக்கப்படுகிறது. அதன் சிறந்த உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழலால், 2300 வேறுபட்ட காட்டு விலங்கினங்கள் இங்கு வாழ்கின்றன.

அதனால், விலங்குகளின் அரசு எனவும் இது அழைக்கப்படுகிறது. அதே வேளையில், அது, நீண்டகால வரலாறு கொண்டதால், நிலவியல் அருங்காட்சியகம் என்ற புகழும் பெறுகிறது.