• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-19 14:38:27    
Xiao Qi Yang தொழில் நடத்தும் கதை

cri
Hai Nan மாநிலத்தின் Hai Kou நகரம், புதிதாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். இங்கே இளைஞர்கள் பலர், சொந்தத் தொழில் நடத்துவது பற்றிய அரசின் கொள்கையின் ஆதரவுடன், தத்தமது அயராத உழைப்பு மற்றும் விவேகத்தைச் சார்ந்து, தமக்குச் சொந்தமான எதிர்காலத்தை உருவாக்க பாடுபட்டு வருகின்றனர்.

Xiao Qi Yang என்பவர், சொந்த தொழில் நடத்தும் கனவைக் கொண்டவர். 2006ஆம் ஆண்டு Hai Nan பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர், Hai Nan ஆசிரியர் பல்கலைக்கழகத்துக்கு அருகில், Hai Shi என்னும் புத்தகக்கடை ஒன்றைத் திறந்து வைத்தார். இங்கே தேர்வுக்கு உதவும் குறிப்பேடுகள் போன்ற தொடர்புடைய பல்வேறு புத்தகங்கள் விற்கப்படுகிறன.

புத்தகக் கடையைத் திறந்து வைப்பதற்கான ஆயத்தக் கட்டத்தில், Xiao Qi Yang அதிக இன்னல்களைச் சந்தித்தார். 2006ஆம் ஆண்டு அவர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற போது, அவரிடம் அதிக பணம் இருக்கவில்லை. Fu Jian மாநிலத்தின் கிராமப்புறத்தில் பிறந்த அவர், நண்பர்களிடமிருந்து சுமார் 30 ஆயிரம் யுவானை கடனாக வாங்கி, இப்புத்தகக்கடையை திறந்தார்.

துவக்கத்தில், புத்தகங்கள் அனைத்தும் தலா பத்து பிரதிகள் இந்த கடையில் வைக்கப்பட்டன. இது தொல்லையை தந்தது. ஏனென்றால், ஒரு வாரத்துக்குள், சில பிரதிகள் விற்கப்படடன. மீண்டும் புத்தகங்களை வாங்கி அங்கே வைக்க வேண்டியிருந்தது. சுமார் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பின்னர், Hai Kou நகரில் தற்சார்பாக தொழில் நடத்தும் பட்டதாரிகள், தொழிற்துறை மற்றும் வணிகத் துறை வாரியத்தால் வழங்கப்படும் சலுகையை அனுபவிக்கலாம் என்று Xiao Qi Yang அறிந்து கொண்டார். அதாவது, மூன்று ஆண்டுகளுக்குள், தொழில் நுடத்துவதற்கான பதிவுக் கட்டணம் மற்றும் நிர்வாகக் கட்டணத்தை குறைக்கலாம் அல்லது விலக்கு பெறலாம். இதனால், அவர் உள்ளூர் தொழிற்துறை மற்றும் வணிக அலுவலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பினார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், ஓராண்டில் ஆயிரம் யுவான் சிக்கனப்படுத்தப்பட்டது என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை.

துவக்கக் கட்டத்தில் ஏற்பட்ட இன்னல்களைச் சமாளித்த பின், Xiao Qi Yangவின் புத்தகக்கடை படிப்படியாக வளர்ந்துள்ளது. Hai Kou நகரின் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை அனுப்புவது, நாள்தோறும் அவர் செய்ய வேண்டிய பணியாகும். "இப்புத்தகங்களின் லாபம் குறைவு. ஒரு புத்தகத்துக்கு 3 அல்லது 4 யுவான் மட்டுமே கிடைத்தது" என்று அவர் கூறினார்.

மாணவர்கள் கேட்கும் புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவதைத் தவிர, நாள்தோறும் விடியற்காலையில் புறப்பட்டு Xiao Qi Yang பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்களின் தேவைகளை அறிந்து கொண்டார். புத்தகக் கடைக்குத் திரும்பிய பின், கள ஆய்வின் படி, அவர் தனது செயல் திட்டத்தை விரைவாக சீர்படுத்தி, இணைய தளங்களில் பல்வேறு தேர்வுகளின் நேரத்தையும், தேர்வுகளுக்கு உதவும் புத்தம் புதுப்பதிப்பு புத்தகங்களையும் கண்டறிந்தார். இதற்குப் பின், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு இப்புதக்கங்களை விற்றார். தற்போது, Hai Shi புத்தகக்கடையில் தேர்வுகளுக்கு உதவும் புத்தகங்களின் வகைகள் அதிகம். பல மாணவர்கள் இப்புத்தகக்கடையை பற்றி கேள்விப்பட்டு, இங்கு வருகை தருகின்றனர்.

Hai Shi புத்தகக்கடையைத் தவிர, Xiao Qi Yang மேலும் இரண்டு புத்தகக்கடைகளையும் திறந்து வைத்தார். தற்போது, அவர் புதிய சந்தையை நாடுகின்றார். அவர் பயிற்சி நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, மொத்தமாக புத்தகங்களை விற்கின்றார். Hai Kou நகரில் வீடு வாங்கும் கனவை விரைவாக நனவாக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாகும்.

上网社会:创业的年轻人 吕

Hai Kou நகரில் தொழில் நடத்தும் இளைஞர்கள்

Lin Xiao Juan என்பவர், 2006ஆம் ஆண்டு Hai Nan பொருளாதார தொழில் நுட்பக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்றார். 2007ஆம் ஆண்டு Hai Kou நகரில் அழகு சாதன பொருட்கள் கடை ஒன்றை அவர் திறந்தார். வாடிக்கையாளர் பொருட்களை வாங்கும் போது, கடை மற்றும் உற்பத்திப் பொருட்களின் மதிப்பில் கவனம் செலுத்துவதாக Lin Xiao Juan கூறினார்.

குறுகிய ஒரு மணி நேரத்துக்குள், அதிக வாடிக்கையாளர்கள் இக்கடைக்கு வந்தனர் என்பதை செய்தியாளர் கண்டார். Lin Xiao Juan உள்ளிட்ட 6 பணியாளர்கள் மிகவும் சுறுசுறுப்பாக அங்கே இருந்தனர்.

Lin Xiao Juan நம்பிக்கை ஆர்வமுடையவர். சொந்தத் தொழில் நடத்தி, ஒரு உரிமையாளராக மாறுவது என்பது அவரது கனவு. எனவே பல்கலைக்கழகத்தில் அவர் சந்தைப்படுத்தல் துறையைத் தெரிவு செய்தார். இக்கடையைத் திறப்பதற்கான நிதிப் பற்றாக்குறை பிரச்சினை, அவரது கனவை நனவாக்கும் முயற்சியை தடை செய்யவில்லை.

இன்னல்களை எதிர்நோக்கி, தன்னம்பிக்கை கொண்டால், அது வெற்றியாகும் என்றும், தொடர்ந்து தனது லட்சியத்தில் ஊன்றி நிற்பது, வெற்றியாகும் என்றும் அவர் கருதி, தன்னைத்தானே ஊக்குவித்தார்.

தற்போது, Lin Xiao Juanவின் கடை, சுமூகமாக வளரும் பாதையில் நடைபோட்டுள்ளது. அவருக்கு புதிய குறிக்கோள் உண்டு. தமது அழகு சாதன பொருட்கள் கடையை, தரமிக்க தொழில் சின்ன தொடராக உருவாக்குவது என்பது அவரது இப்புதிய குறிக்கோளாகும்.

Lin Xiao Juanஐப் போல், வேலை இழந்த தொழிலாளி Li Yuan, தொழில் நடத்தும் கனவைக் கொண்டுள்ளார். தனது கனவை நிறைவேற்ற, Hai Kou நகரின் அரசு முதலீடு செய்த, Xin Hong Mao தொழில் முறை திறன் பயிற்சி மையத்தின் இலவசப் பயிற்சி வகுப்பில் அவர் கலந்து கொண்டார். தற்போது, பத்து நாள் நீடித்த பயிற்சியை Li Yuan முடித்து, தொழில் நடத்தும் கருத்து, தொழில் நடத்தும் திட்டம் தொடர்பான பயிற்சி மூலம், தொழில் நடத்துதல் பற்றிய திட்டத்தை எழுதிமுடித்தார். மேலும் முக்கியமானது, சர்வதேச உழைப்பாளர் அமைப்பும் சீன தொழிலாளர் நலன் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகமும் வழங்கும் SYB பயிற்சி சான்றிதழைப் பெற்றார். தலைசிறந்த மாணவரான அவர், இச்சான்றிதழைக் கொண்டு, தொழில் நடத்துவதற்கான சீன அரசின் கடனையும், வரி வசூலிப்பு தொடர்பான சலுகையையும், ஆதரவையும் பெற முடியும். தொழில் நடத்துதல் தொடர்பான இலவசப் பயிற்சி, அரசால் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நடத்துதல் மேடை, சிறு தொகை கடன் ஆகியவற்றின் மூலம், எந்த நிதித்தொகையும் செலுத்தாமல், Li Yuan தொழில் நடத்த முடியும்.

பயிற்சியில் பலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளதாகவும், கற்றுக்கொண்டதை பணியில் பயன்படுத்த வேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறினார்.

கடந்த மே திங்கள் 15ஆம் நாள், Li Yuan, Hai Kou நகரின் Chun Yuan வணிக மையத்துக்கு வந்து, வேலை இழந்தோர், பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உள்ளிட்ட மாணவர்கள் ஆகியோருக்கென நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டார். இங்கே, Li Yuan 50 ஆயிரம் யுவானை செலுத்தினால்தான், Chun Yuan வணிக மையத்தின் எந்த கடையையும் நடத்தலாம். கடையின் அனைத்து சாதனங்களையும், விற்கப்படும் சரக்குகளையும் Chun Yuan வணிக மையம் வழங்குகிறது. அவர் திங்களுக்கு குறைந்தது 2 ஆயிரம யுவான் வருமானம் பெறலாம். இங்கே தற்சார்பாக தொழில் நடத்தும் பாதையில் அவர் காலடியெடுத்து வைக்க உள்ளார்.

"தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இங்கே தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என விரும்புவதாகவும்"அவர் கூறினார்.

தொழில் நடத்தல் பயிற்சி, சிறிய தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான பயிற்சி, தொழில் நடத்துவதை ஆதரிக்க சிறு தொகை உத்தரவாத கடன் உள்ளிட்ட நடவடிக்கைகள் Hai Kou நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனிமேல், தத்தமது கனவை நனவாக்க, Lin Xiao Juan மற்றும் Li Yuanஐப் போல், மேலதிக மக்கள் தற்சார்பாக தொழில் நடத்தும் வரிசையில் சேர்வர்.