இதனிடையில் ஏற்கனவே சி ஷுவை யுவே நாட்டு மன்னன் வூ நாட்டுக்கு அனுப்ப காரணமாயிருந்த மதிநுட்பம் நிறைந்த வென் ஷுங் என்பவர் மேலும் ஒரு தீவிரமான, உத்தியை தந்திரமாக பயன்படுத்தினார். குவோ ஜியன் என்ற பெயரில் வூ நாட்டுக்கு வந்த வென் ஷுங், யுவே நாட்டில் வேளாண்மை பொய்த்துப்போனதால் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது, எனவே வூ நாடுதான் உதவவேண்டும் என்று வேண்டினார் குவோ ஜியனாக வந்த வென் ஷுங். இதை கேட்ட, போ பி என்ற துதிபாடி அமைச்சர் வூ நாட்டு அரசன் ஃபூ ச்சாயிடம், யுவே நாட்டுக்கு தானிய உதவியளித்து உதவவேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். ஆனால் மூத்த அமைச்சரான வூ ஸிசியுவோ, தானிய உதவி அளிக்கக்கூடாது என்று அரசனிடம் கூறியதோடு, அத்தகைய நடவடிக்கை ஏதும் எடுப்பதை கடுமையாக எதிர்த்தார். அரசன் ஃபூ ச்சாய்க்கு என்ன முடிவு செய்வதென்று தெரியாமல் தன் ஆசை நாயகியான சி ஷுவிடமே சென்று கேட்டான். சி ஷுவுக்கு வென் ஷுங்கின் எண்ணமும் திட்டமும் புரியாதா என்ன. அவளும், அரசே இதில் என்ன விவாதம் வேண்டியிருக்கிறது. ஒரு நாட்டின் அடித்தளம் மக்களே. மக்களுக்கு வாழ்வாதாரம் உணவே. யுவே நாடு எப்போதோ தங்களின் ஆட்சிக்கு கட்டுப்பட்டதாக அறிவித்துவிட்டாயிற்று. அனவே யுவே நாட்டு மக்களும் உங்களது நாட்டு மக்களே. எனவே நீங்கள் அவர்களை பட்டியினில் வாட விடமுடியாது. இவ்வளவு ஏன், மத்திய நமவெளிப் பகுதியை ச்சியை சேர்ந்த கோமகன் ஹுவான் ஆதிக்கம் செலுத்தியபோது, ஒரு நாடு பஞ்சத்தால் வாடினால் மற்ற நாடுகள் அதற்கு நிவாரண உதவியளிக்க வேண்டும் என்று விதித்திருந்தார். ச்சின் நாட்டை சேர்ந்த இளவரசன் மு, ஒருமுறை எதிரி நாட்டு மக்கள் பஞ்சத்தில் வாடியபோது பேரளவு தானிய உதவியளித்தார். ஆக நீங்கள் அவர்களது பெருந்தன்மை மற்றும் ஈகையை மிஞ்சவேண்டாமோ? என்று கூறினாள். அரசன் ஃபூ ச்சாயும், அமைச்சர் போ பி உள்ளிட்ட பலர் யுவே நாட்டுக்கு தானிய உதவியளிக்குமாறு என்னை வலியுறுத்தினர். ஆனால் யாரும் உன்னை போல அழகாக அதற்கு காரணமோ, உதவுவதன் மூலமான நன்மையையோ எனக்கு விளக்கவில்லை. நான் நாளை நீ கூறியதை போல் யுவே நாட்டு மக்களுக்கு உதவும் என் முடிவை யுவே நாட்டு தூதன் குவோ ஜியனிடம் தெர்விப்பேன் என்றான்.
|