• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-20 15:25:23    
மகௌவ் கண்காட்சி

cri

மகௌவ் கண்காட்சி

புகைப்படக்கலை கண்டுபிடிப்பு மற்றும் சீன மகௌவின் பழைய நிழற்ப்படங்கள் என்ற தலைப்பில் கண்காட்சி ஒன்று மகௌவ் அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது. பழைய நிழற்பபடங்கள் மற்றும் உலகின் முதல் நிழற்ப்படக்கருவி உள்பட பழைய நிழற்ப்பட கருவிகள் ஆகியவை இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மகௌவ் அருங்காட்சியகமும், பிரான்ஸின் Nicephore Niepce அருங்காட்சியகமும் இணைந்து இக்கண்காட்சியை ஆகஸ்ட் 23 ஆம் நாள் வரை நடத்துகின்றன. பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, சீன மகௌவ் போன்ற நாடுகள் மற்றும் பிரதேசத்தின் 13 அருங்காட்சியகங்களிடம் இருந்து இதில் வைக்கப்ட்டுள்ள பழைய நிழற்ப்படங்கள் பெறப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள உலகின் முதல் நிழற்படக்கருவியும், இன்னும் 20 முற்கால நிழற்ப்படக்கருவிகளும் பிரன்ஸின் Nicephore Niepce அருங்காட்சியகத்திலிருந்து இரவல் வாங்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி மகௌவில் நடைபெறுவதில் வரலாற்று முக்கியத்துவம் உண்டு.

1827 ஆண்டு பிரான்ஸை சேர்ந்த Joseph Nicephore Niepce நிழற்ப்படத்தை உலோகத் தட்டில் பதிக்கும் முறையை கண்டுபிடித்து, புகைப்படக்கலையின் தந்தை என்று பெருமை பெற்றார். பிரான்ஸிலிருந்து மகௌவ் வழியாக தான் சீனாவுக்கு புகைப்படக்கலை அறிமுகமானதாம். இந்த கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரின் தகவலின்படி சீனாவின் பழைய நிழற்ப்படங்களாக தற்போது உள்ளவை 1844 ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த Jules Itier என்பவரால் எடுக்கப்பட்டதாம்.

பெண் தொடர்வண்டி ஓட்டுனர்

பெண்கள் இன்னென்ன வேலைகள் தான் செய்ய வேண்டும் என்றிருந்த நிலை மலையேறிவிட்டது. எல்லா தொழில்களிலும் ஆண்களுக்கு இணையாக பணிபுரியும் நிலை ஏறக்குறைய வந்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் திங்களில், ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட பீட்டர்ஸ்பர்க்கில் நிலத்தடியில் செல்லக்கூடிய நகர தொடர்வண்டியில் துணை ஓட்டுனராக பணிபுரிய 22 வயதான Anna Klevets பெண்மணி தொடர்வண்டி வாரியத்திடம் விண்ணப்பம் செய்தார். ஆனால் பெண்கள் தொடர்வண்டி ஓட்ட தடை இருப்பதாக தெரிவிக்கப்பட்டு அவர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே ரஷியாவின் உள்ளூர் நகரங்களில் ஓடுகின்ற நிலத்தடி தொடர்வண்டியில் ஓட்டுனராக பணிபுரிய பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆபத்தான கனரக கருவிகளோடு பெண்கள் வேலை செய்ய முடியாது என்பதன் அடிப்படையில் அப்பெண்மணியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ரஷியாவின் Itar-Tass செய்தி நிறுவனம் வெளியிட்டது.

அப்படியானால் பெண்களும் தொடர்வண்டி ஓட்டுனராக பணிபுரியும் அளவில் அப்பணி சூழ்நிலை மாற்றப்பட வேண்டும். ஆண்களும், பெண்களும் பாதுகாப்பாக பணிபுரியும் வகையில் சமமான, பாதுகாப்பான பணி சூழ்நிலை கட்டியமைக்கப்பட வேண்டியது தேவையாகிறது என்று Klevets மேல் முறையீடு செய்ய போவதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.