திபெத்தில் புதிய வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு
cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 23 இலட்சத்துக்கு மேலான விவசாயிகள் மற்றும் ஆயர்கள் வாழ்கின்றனர். திபெத்தின் மொத்த மக்கள் தொகையில், இது 80 விழுக்காட்டுக்கு மேல் வகிக்கிறது. பாரம்பரிய வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு, அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வழிமுறையாகும். இப்பொழுது, இந்த நிலைமை மாறியுள்ளது. திபெத்தின் நெடுஞ்சாலையில் சீருந்து ஓட்டிச் சென்றால், கூடாரம் போன்று மூடப்பட்ட வெப்ப அறைகள், கால்நடை வளர்ப்புத் தளங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். தனிச்சிறப்பான வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையின் வளர்ச்சியினால், இந்த பண்டைய நிலத்தில் புதிய உயிராற்றல் ஏற்பட்டது. இதன் மூலம், விவசாயிகளும் ஆயர்களும் நன்மைப் பெற்று வருகின்றனர். திபெத்தின் ரோகா பிரதேசத்தைச் சேர்ந்த நெதுங் மாவட்டத்தில், விவசாயிகள் கறவை மாடுகளை வளர்க்கின்றனர். ஆனால், கறவை மாடுகளின் தரம் சரியில்லை, பால் உற்பத்தி அளவு குறைவு ஆகிய காரணங்களால், பெரிய அளவான உற்பத்தியும் வருமானமும் கிடைப்பது கடினம்.
 2008ம் ஆண்டு, உள்ளூர் அரசின் ஏற்பாட்டில், நெதுங் மாவட்டத்தின் தலைசிறந்த கறவை மாடு வளர்ப்புத் தளம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இத்தளம், முக்கியமாக தலைசிறந்த ஹொஸ்டேயின் கறவை மாடுகளை வளர்த்து, முன்னுரிமை விலையில் கிராமவாசிகளுக்கு விற்பனை செய்தது. இத்தகைய கறவை மாடுகளின் பால் உற்பத்தி அளவு, முன்பு அவர்கள் வளர்த்த கறவை மாட்டு இனங்களை விட, 3 முதல் 5 மடங்கு அதிகரித்தது. இதனால், உள்ளூர் மக்களின் வருமானம் பெருமளவில் உயர்ந்துள்ளது. இது பற்றி குறிப்பிடுகையில், நெதுங் மாவட்ட வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில் நிறுவனத்தின் பொறுப்பாளர் Hou shu bin அறிமுகப்படுத்தியதாவது:
 கடந்த சில ஆண்டுகளில், நெதுங் மாவட்டத்தில், வெள்ளைப் பூண்டு பயிரிடுதல் வளர்க்கப்பட்டது. இதனால், உள்ளூர் அரசு, கறவை மாட்டு வளர்ப்பை, வெள்ளைப் பூண்டு பயிரிடுதலுடன் இணைக்கிறது. ஒவ்வொரு குடும்பமும், 3 மூ நிலத்தில் வெள்ளைப் பூண்டுகளைப் பயிரிட்டால், அரசின் உதவித் தொகைப் பெற்று, முன்னுரிமை விலையுடன் கறவை மாடு ஒன்றை வாங்கலாம் என்று அவர் கூறினார். இதுவரை, ரோகா பிரதேசத்தின் வேளாண் துறையில், கோதுமை மற்றும் பார்லி 60 விழுக்காடாகவும், மேய்ச்சல் புல், 15 விழுக்காடாகவும் உள்ளன. வேறு 25 விழுக்காட்டு விளைநிலங்களில், தொழில் பயிர்கள் பயிரிடப்பட்டன. கட்டமைப்பு சரிப்படுத்தலுடன், தனிச்சிறப்பான பயிர்களை பயிரிட்ட பின், உள்ளூர் மக்களின் வருமானம் பெருமளவில் அதிகரித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
 தற்போது, திபெத்தின் தனிச்சிறப்பான வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை துவக்கக் கட்டத்தில் இருப்பதால், அதன் அளவு மிகவும் பெரியதாக இல்லை. தளங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவு. ஆனால், எதிர்கால வளர்ச்சித் திட்டம் குறிப்பிட்ட அளவில் தெளிவாக இருக்கிறது. இது பற்றி, லோ ஹோங்பெங் கூறியதாவது: திபெத்துக்கு தனிச்சிறப்பான காலநிலை உண்டு. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் உற்பத்திப் பொருட்கள் மாசுபடாத, தர மிக்கவை. இதனால், நுகர்வோரால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. உற்பத்தி அளவைப் பெருக்கிய பிறகு, உற்பத்திப் பொருட்களின் விற்பனைச் சந்தையை விரிவாக்குவதற்கு, வசதியாக இருக்கும் என்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
 தவிர, திபெத்தின் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையின் வளர்ச்சிக்கான அறிவியல் தொழில் நுட்ப ஆதரவை, சீன நடுவண் அரசு எப்பொழுதும் அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில், இதற்கு கோடிக்கணக்கான யுவான் நிதியை ஒதுக்கீடு செய்து, 1000க்கு மேலான அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்களை திபெத்துக்கு சீன நடுவண் அரசு அனுப்பும். அவர்களின் வழிக்காட்டுதல் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப உதவியுடன், திபெத்தின் தனிச்சிறப்பியல்புடைய வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை மென்மேலும் சீராக வளரும்.
|
|