இது வரை, சீனாவின் மொத்த தானிய உற்பத்தி, உலகில் முதல் இடத்தை வகிக்கிறது. 130 கோடி மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்த்து, சீனாவின் சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் நிதானமான சீரான வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
60 ஆண்டுகால வளர்ச்சியின் மூலம், சீனாவின் தானியகள், பருத்தி, எண்ணெய் உள்ளிட்ட முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. வேளாண் துறையின் தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, கடந்த 60 ஆண்டுகளில், சீனாவின் தானிய உற்பத்தியளவு, 1949ம் ஆண்டின் 10 கோடி டன்னிலிருந்து, 2008ம் ஆண்டின் 50 கோடி டன்னுக்கு உயர்ந்தது.
மேலும், பருத்தி, எண்ணெய், சர்க்கரை போன்றவை வெகுவாக அதிகரித்தன.
|