2010ம் ஆண்டு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் திபெத் பரப்புரை வார நடவடிக்கை 22ம் நாள் துவங்கும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மங்கல சின்னம் haibao திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகரில் வைக்கப்படும்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மங்கல சின்னம் haibao
திபெத்தின் Shoton விழா நடைபெறும் காலத்தில் இந்நடவடிக்கையும் நடைபெறவுள்ளது. ஆகையால், haibaoவையும், இவ்விழாவின் மங்கலப் பொருளான pingcuo ஐயும் பரிமாறும் விழாவும் நடைபெறும். அதேவேளையில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான திபெத் பற்றிய சிறப்பு கருத்தரங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் இடம்பெறுகின்றன என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் துணைச் செயலாளர் mangyang க்கூறினார்.
இனிமையான திபெத் என்ற தலைப்பில், இப்பொருட்காட்சியின் திபெத் காட்சி அரங்கு, திபெத்தின் புதிய வளர்ச்சி, வாழ்க்கை மற்றும் மாற்றத்தை முக்கியமாக கொண்டு, தேசிய இனப் பண்பாட்டை வெளிப்படுத்துதல், இயற்கைச் சூழல் பாதுகாப்பு, தொடரவல்ல வளர்ச்சி முதலிய கண்ணோட்டங்களில் அமைக்கப்படும்.
|